முகிலன்குடியிருப்பில் புதிய குடிநீர் தொட்டி திறப்பு..

0
104

தென்தாமரைகுளம் அருகே முகிலன்குடியிருப்பு பிள்ளையார் கோயில் அருகில் வார்டு கவுன்சிலர் அமுதா பால்ராஜ் சொந்த நிதியியல் ரூ. 25 ஆயிரம் மதிப்பில் புதிய குடிநீர் தொட்டி கட்டப்பட்டது. இதற்கான திறப்பு விழா நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பேரூராட்சி தலைவி கார்த்திகா பிரதாப் கலந்து கொண்டு புதிய குடிநீர் தொட்டியை திறந்து வைத்தார். இதில், முகிலன்குடியிருப்பு மேற்கு ஊர் தலைவர் முகிலன்குடியிருப்பு கனகராஜன், திமுக நிர்வாகி தாமரை பிரதாப், அதிமுக நிர்வாகி பால்துரை உட்பட பலர் பங்கேற்றனர்.