Home 2024
Yearly Archives: 2024
பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தமிழக துப்பாக்கி சுடுதல் வீரர் பிருத்திவிராஜ் தொண்டைமான் தேர்வு
பிரான்ஸ் தலைநகரான பாரிஸில் வரும் ஜூலை 26 முதல் ஆகஸ்ட் 11 வரை ஒலிம்பிக் போட்டி நடைபெறுகிறது. இதில் துப்பாக்கி சுடுதலில் ஷாட்கன் பிரிவில் பங்கேற்கும் 5 பேர் கொண்ட இந்திய அணியை இந்திய துப்பாக்கி சுடுதல் சங்கம் நேற்று அறிவித்துள்ளது. இதில் தமிழகத்தைச் சேர்ந்த 36 வயதான பிருத்திவிராஜ் தொண்டைமான் இடம் பெற்றுள்ளார். இவர், ஆடவருக்கான டிராப் பிரிவில் பங்கேற்க உள்ளார்.
பிருத்திவிராஜ் தொண்டைமானுடன் இந்திய அணியில் ராஜேஷ்வரி குமாரி (மகளிர் டிராப்), அனந்த்ஜீத் சிங் நருகா (ஆடவர் ஸ்கீட்), ரைசா தில்லான்,...
மாக்சிமிலியன் அடித்த சுய கோலால் பிரான்ஸ் வெற்றி | Euro Cup
யூரோ கோப்பை கால்பந்து தொடர் ஜெர்மனியில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று ‘டி’ பிரிவில் டசால்டார்ஃப் மைதானத்தில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் பிரான்ஸ் - ஆஸ்திரியா அணிகள் மோதின. ஆட்டத்தின் 8-வது நிமிடத்தில் அட்ரியன் ராபியோட் உதவியுடன் பந்தை பெற்ற பிரான்ஸ் அணியின் நட்சத்திர வீரரான கிலியன் பாப்பே பந்தை விரைவாக கடத்திச் சென்று இலக்கை நோக்கி வலுவாக உதைத்தார். ஆனால் ஆஸ்திரியா கோல் கீப்பர் பேட்ரிக் பென்ட்ஸ் இடது புறத்தில் பாய்ந்து கோல் விழவிடாமல் பந்தை தட்டிவிட்டார்.
13-வது நிமிடத்தில் பிரான்ஸின் மார்கஸ்...
காஷ்மீரில் தீவிரவாதிகள் பற்றி தகவல் தெரிவிக்காத 3 பேர் கைது
காஷ்மீரின் ரியாசி மாவட்டத்தில் கடந்த 10-ம் தேதி பேருந்தில் சென்ற பக்தர்கள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 9 பேர் உயிரிழந்தனர்,
தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளை தேடும் பணியில் பாதுகாப்பு படையினர் தீவிரமாக ஈடுபட்டனர். மறுநாள் தோடா மாவட்டத்தின் பாதர்வா என்ற இடத்தில் உள்ள சோதனைச் சாவடி மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் பாதுகாப்பு படையினர் 5 பேர் காயம் அடைந்தனர்.
தாக்குதல் நடத்திய 4 தீவிரவாதிகள் தோடா மாவட்டத்தின் பாதர்வா பகுதியில் ஜாய் என்ற இடத்தில் கடந்த சில நாட்களாக சுற்றித்...
விசாகப்பட்டினத்தில் அரசு பணம் ரூ.500 கோடியில் ஜெகன் கட்டிய சொகுசு பங்களாக்கள்: ரூ.1 கோடி செலவில் நவீன கழிவறை
ஜெகன் ஆட்சியில் விசாகப்பட்டினத்தின் ரிஷிகொண்டா மலைப் பகுதியில், அரசுப் பணம் ரூ. 500 கோடி செலவில் 7 சொகுசு பங்களாக்களை ரகசியமாக கட்டியுள்ளனர். இதில் ஒவ்வொரு கழிவறையும் ரூ.1 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ளது.
ஆந்திர மாநிலத்தின் முன்னாள் முதல்வரான ஜெகன்மோகன் ரெட்டி விசாகப்பட்டினத்தை தலைநகரமாக்க முயற்சித்தார். இதனால், அப்போதைய அமைச்சர் ரோஜாவின் தலைமையில், சுற்றுலா வளர்ச்சி கழகம்சார்பில், விசாகப்பட்டினத்தில் உள்ள ரிஷிகொண்டா எனும் இடத்தில் இருந்த மிக அழகான மலையின் ஒருபுறம் தரைமட்டமாக்கப்பட்டது. இதனை எதிர்த்து நீதிமன்றங்களில் வழக்கும் தொடரப்பட்டது. ஆனால், இங்கு சுற்றுலாவுக்கான...
ஊழல் வழக்கில் பினராயி விஜயன் பதில் அளிக்க கேரள உயர் நீதிமன்றம் நோட்டீஸ்
கேரள முதல்வர் பினராயி விஜயனின் மகள் டி.வீணா ‘எக்ஸாலாஜிக்’ என்ற ஐடி நிறுவனத்தை நடத்தி வருகிறார். இதற்கிடையில் கொச்சியில் உள்ள ‘கொச்சின் மினரல்ஸ் அண்டு ரூடைல் லிமிடெட்’ (சிஎம்ஆர்எல்) என்று கனிம நிறுவனத்துக்கு கேரள அரசு சுரங்க அனுமதி வழங்கியது. இதற்கு லஞ்சமாக ஒவ்வொரு மாதமும் அந்த நிறுவனம் வீணாவின் எக்ஸாலாஜிக் நிறுவனத்துக்கு பணம் கொடுப்பதாக காங்கிரஸ் எம்எல்ஏ மேத்யூ குழல்நாடன் குற்றம் சாட்டினார். மேலும் இதுகுறித்து நீதிமன்ற கண்காணிப்புடன் கூடிய விசாரணை நடத்தவேண்டும் என ஊழல் கண்காணிப்பு நீதிமன்றத்தில் முறையிட்டார்.
அவரது கோரிக்கை...
ஆந்திர சட்டப்பேரவை கூட்டம் 21-ம் தேதி தொடக்கம்
ஆந்திர முதல்வராக சந்திரபாபு நாயுடு 4-வது முறையாக பதவியேற்ற பின், ஆந்திர மாநில சட்டப்பேரவை கூட்டம் வரும் 21-ம் தேதிமுதல் முறையாக தொடங்க உள்ளது.
ஆந்திர மாநிலத்தில் சந்திரபாபு நாயுடு 4-வது முறையாக முதல்வராக பதவியேற்றார். இந்நிலையில் வரும் 21 மற்றும் 22 ஆகியஇரு நாட்களும் ஆந்திர சட்டப்பேரவை கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில், அனைத்து கட்சி எம்.எல்.ஏக்களும் பதவி ஏற்க உள்ளனர்.
மேலும், சபாநாயகராக அய்யண்ண பாத்ருடு தேர்ந்தெடுக்கப்பட உள்ளார். துணை சபாநாயகர் பதவி பாஜகவுக்கு வழங்கப்படலாம் என கூறப் படுகிறது.
துணை முதல்வராக பொறுப்பு...
கேஜ்ரிவால் உதவியாளர் தாக்கிய விவகாரம்: ராகுல், உத்தவ், சரத் பவாருக்கு ஸ்வாதி மாலிவால் கடிதம்
டெல்லி மகளிர் ஆணைய தலைவராக 8 ஆண்டுகளுக்கு மேல் பதவி வகித்தவர் ஸ்வாதி மாலிவால்.இவர் கடந்த ஜனவரி மாதம் ஆம்ஆத்மி கட்சி சார்பில் மாநிலங்களவை உறுப்பினராக தேர்வானார். இவர் ராகுல், சரத் பவார்,உத்தவ் தாக்கரே, அகிலேஷ் யாதவ் உட்பட இண்டியா கூட்டணிக் கட்சித் தலைவர்களுக்கு கடிதம் எழுதி உள்ளார். அதில் கூறியிருப்பதாவது:
டெல்லி மகளிர் ஆணைய தலைவராக நான் பதவி வகித்த காலத்தில், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக 1.7 லட்சம் புகார்களை கையாண்டுள்ளேன். இந்நிலையில், கடந்த மே 13-ம்தேதி டெல்லி...
தடை செய்யப்பட்ட இயக்கங்கள் தொடர்பான தீர்ப்பாயம் விசாரணை குன்னூரில் தொடக்கம்
சட்டத்துக்குப் புறம்பான நடவடிக்கைகள் தடுப்பு தீர்ப்பாய அமர்வு குன்னூரில் நேற்று டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி புருசைந்திர குமார்கவுரவ் தலைமையில் நடைபெற்றது.
இந்தியாவில் தடை செய்யப்பட்ட இயக்கங்களின் தடையை நீடிப்பது அல்லது நீக்குவது தொடர்பாக, சட்டத்துக்குப் புறம்பான நடவடிக்கைகள் தடுப்புத் தீர்ப்பாய அமர்வு 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும்.
1997-ல் தொடங்கப்பட்ட சிமி (இந்திய இஸ்லாமிய மாணவர் இயக்கம்) என்ற அமைப்புக்கு மத்திய அரசு 2001-ல் தடை தடை விதித்தது. தொடர்ந்து தடை நீட்டிக்கப்பட்டு, 2019-ல் ஐந்தாண்டு தடை நீட்டிப்பு வழங்கப்பட்டது.
இந்த தடை உத்தரவு நேற்றுடன்...
பாலியல் குற்ற வழக்குகளை உடனுக்குடன் பதிவு செய்ய புதிய இணையதளம்: உதயநிதி ஸ்டாலின் தொடங்கிவைத்தார்
பாலியல் குற்றங்களால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் தொடர்பான வழக்குகளை காவல்துறை, போக்சோ நீதிமன்றம், மகளிர்நீதிமன்றம் மற்றும் குழந்தைகள் நலன் சிறப்புத்துறை ஆகியவைஉடனுக்குடன் பதிவு செய்யும்வகையில் போக்சோ இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் குழந்தைகள் தொடர்பான வழக்குகள் பதிவு செய்யப்படுவது முதல் நீதிமன்ற இறுதி தீர்ப்பு வரை ஒவ்வொரு நடவடிக்கையையும் துறை அலுவலர்கள் கண்காணித்து வழக்குகளை விரைவுபடுத்த முடியும். மேலும், பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கான இழப்பீட்டு தொகையை தாமதமின்றி ஆன்லைனில் நேரடியாக அவர்களின் வங்கிக்கணக்குக்கு செலுத்தவும் இந்த இணையதளம் பயனுள்ளதாக இருக்கும்.
இந்த புதிய இணையதளத்தை இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாடு,...
தமிழகத்தில் உள்ள 16 முக்கிய கோயில்களில் திருமண மண்டபம், தங்கும் விடுதி கட்ட நிதி விவரங்களை தாக்கல் செய்ய உத்தரவு
தமிழகத்தில் உள்ள 16 முக்கிய கோயில்களில் திருமண மண்டபங்கள், தங்கும் விடுதிகள், வணிக வளாகங்கள் போன்றவற்றை கட்டுவதற்கான நிதி ஆதாரங்கள், கட்டுமான அனுமதி போன்ற விவரங்கள் அடங்கிய அறிக்கையை இருவார காலத்தில் தாக்கல் செய்ய அறநிலையத் துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள கோயில் நிலங்களில் கோயில் நிதியில் இருந்து திருமண மண்டபங்கள், பக்தர்களுக்கான தங்கும் விடுதிகள், வணிக வளாகங்கள் கட்டப்படுவதை எதிர்த்து ஆலய வழிபாட்டாளர் சங்கத் தலைவரும், இண்டிக் கலெக்டிவ் அறக்கட்டளை நிர்வாகியுமான மயிலாப்பூரை சேர்ந்த டி.ஆர். ரமேஷ் சென்னை உயர்...














