Home 2024
Yearly Archives: 2024
ஏ.ஆர்.முருகதாஸ் – சல்மான் கானின் ‘சிக்கந்தர்’ டீசர் வெள்ளிக்கிழமை ரிலீஸ்
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான் நடிக்கும் ‘சிக்கந்தர்’ படத்தின் டீசர் வெள்ளிக்கிழமை முற்பகல் வெளியாகிறது.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான் நடிக்கும் படம், ‘சிக்கந்தர்’. பான் இந்தியா படமாக உருவாகும் இந்தப் படத்தை சஜித் நாடியத்வாலா தயாரிக்கிறார். ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடிக்கிறார். சத்யராஜ், பிரதீக் பப்பர் உட்பட பலர் நடிக்கின்றனர்.
ஆக்ஷனுக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாகும் இந்தப் படத்தில் நடித்தபோது சல்மான் கானுக்கு விலா எலும்பில் காயம் ஏற்பட்டது. சிகிச்சைக்குப் பின் படப்பிடிப்பில் அவர் மீண்டும் இணைந்தார்.
டிசம்பர் 27-ம் தேதியான வெள்ளிக்கிழமை சல்மான் கான்...
ரூ.1,700 கோடி வசூலை எட்டி ‘புஷ்பா 2’ புதிய சாதனை!
அல்லு அர்ஜுன் நடித்துள்ள ‘புஷ்பா 2’ திரைப்படம் 21 நாட்களில் ரூ.1,705 கோடியை வசூலித்துள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் 2024-ம் ஆண்டில் அதிவேகமாக, அதாவது ரிலீஸ் ஆனதில் இருந்து மிகக் குறைந்த நாட்களில் அதிக வசூல் ஈட்டிய இந்திய திரைப்படம் என்ற பெருமையையும் பெற்றுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.
உலக அளவில் ‘புஷ்பா 2’ திரைப்படம் 21 நாட்களில் ரூ.1,705 கோடியை வசூலித்துள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அல்லு அர்ஜுனின் திரையுலக பயணத்தில் ரூ.1700 கோடி வசூல் என்பது புதிய மைல்கல்லாகவும் பார்க்கப்படுகிறது. மேலும், இப்படம் ‘பாகுபலி...
டி 20 பாணியில் விளையாடிய சாம் கான்ஸ்டாஸ்: ஆஸி. அணி 6 விக்கெட் இழப்புக்கு 311 ரன் குவிப்பு
இந்தியாவுக்கு எதிரான 4-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி முதல் நாள் ஆட்டத்தில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 311 ரன்கள் குவித்தது. அறிமுக வீரரான சாம் கான்ஸ்டாஸ் டி 20 பாணியில் விளையாடி 60 ரன்கள் விளாசி சிறப்பான தொடக்கம் அமைத்துக் கொடுத்தார்.
மெல்பர்ன் மைதானத்தில் நேற்று தொடங்கிய இந்த பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் பேட்டிங்கை தேர்வு செய்தார். அந்த அணியில் 19 வயதான தொடக்க பேட்ஸ்மேன் சாம் கான்ஸ்டாஸ் அறிமுகமானார்....
பிரம்மபுத்திரா நதியின் குறுக்கே ‘உலகின் மிகப் பெரிய அணை’ கட்ட சீனா ஒப்புதல்
திபெத்தில் உள்ள பிரம்மபுத்திரா நதியின் குறுக்கே உலகின் மிகப் பெரிய அணையை எழுப்ப சீனா தற்போது ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சீனாவின் இந்தத் திட்டம் இந்தியா, வங்கதேசம் ஆகிய நாடுகளுக்கு மிகப் பெரிய சிக்கலை ஏற்படுத்தும் எனச் சொல்லப்படுகிறது.
பிரம்மபுத்திரா நதி, அருணாச்சல பிரதேசம் வழியாக இந்தியாவுக்குள் நுழைந்து வடகிழக்கு மாநிலங்கள் வழியாக, வங்கதேசத்தின் வழியாக பாய்ந்து வங்காள விரிகுடா கடலில் கலக்கும். இது உலகின் மிக நீண்ட நதிகளில் ஒன்று. திபெத் பகுதியை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் சீனா, பிரம்மபுத்திரா தண்ணீரை...
ஜப்பான் ஏர்லைன்ஸில் சைபர் தாக்குதல்: டிக்கெட் விற்பனை நிறுத்தம்; விமானங்கள் தாமதம்
ஜப்பான் ஏர்லைன்ஸ் சைபர் தாக்குதலுக்கு உள்ளான நிலையில். டிக்கெட் விற்பனை நிறுத்தப்பட்டுள்ளது. மேலும், உள்நாட்டு, சர்வதேச விமான போக்குவரத்திலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பாக ஜப்பான் ஏர்லைன்ஸ் எக்ஸ் சமூகவலைதளத்தில் வெள்யிட்டுள்ள பதிவில், “உள்ளூர் நேரப்படி வியாழக்கிழமை அதிகாலை 7.25 மணிக்கு ஜப்பான் ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இது உள்நாட்டு, சர்வதேச விமான சேவைகளில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. நிலைமை சீரானதும் நாங்கள் வாடிக்கையாளர்களுக்கு அது குறித்த தகவலைப் பகிர்கிறோம். சிரமத்துக்கு வருந்துகிறோம்.” என்று தெரிவித்தது.
பின்னர், மீண்டும் காலை 8.54 மணியளவில் வெளியிட்ட...
மன்மோகன் சிங் மறைவுக்கு ராகுல், கார்கே இரங்கல்: மத்திய அரசு 7 நாள் துக்கம் அறிவிப்பு
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவைத் தொடர்ந்து மத்திய அரசு ஏழு நாட்கள் துக்கம் அனுசரிக்க அறிவித்துள்ளது. பிரதமர் நரேந்திரமோடி, காங்கிரஸ் எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் மன்மோகன் சிங்கிற்கு அஞ்சலி பதிவிட்டுள்ளனர்
நாடாளுமன்ற மாநிலங்களவையின் காங்கிரஸ் எம்பியான மன்மோகன் சிங் டிசம்பர் 26 இரவு 9.51 மணிக்கு காலமானார். இவரது உயிர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் பிரிந்தது.
மூச்சுத்திணறல் காரணமாக மன்மோகன் சிங் இரவு 8.00 மணிக்கு டெல்லி எய்ம்ஸில் அனுமதிக்கப்பட்டார். தகவல் கிடைத்ததும் கர்நாடகாவின் பெல்காமிலிருந்த காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுனா...
உலக தரத்தில் பொருட்களை உற்பத்தி செய்ய வேண்டும்: வீர பாலகர் தினத்தில் பிரதமர் நரேந்திர மோடி அறிவுரை
உலகத் தரத்தில் பொருட்களை உற்பத்தி செய்ய வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தி உள்ளார்.
வீர பாலகர் தினத்தை ஒட்டி டெல்லியில் நேற்று நடைபெற்ற விழாவில் அவர் பேசியதாவது: சீக்கியர்களின் 10-வது குரு கோவிந்த் சிங்கின் இளைய மகன்கள் பாபா சோராவார் சிங் (9), பாபா பதே சிங் (6) ஆகியோர் முகலாய படை வீரர்களால் கடத்தப்பட்டனர். அவர்களை மதம் மாறச் சொல்லி நவாப் வாசிர் கான் நிர்பந்தித்தார். வீரமிக்க இரு சிறுவர்களும் மதம் மாற மறுத்துவிட்டனர். இதன்காரணமாக 1704-ம் ஆண்டு டிசம்பர்...
ராஜஸ்தான் டேங்கர் லாரி விபத்து உயிரிழப்பு 19 ஆக உயர்வு
ராஜஸ்தானில் எல்பிஜி டேங்கர் லாரி விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை நேற்று 19 ஆக உயர்ந்தது.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் கடந்த 20-ம் தேதி எல்பிஜி டேங்கர் லாரி மீது சரக்கு லாரி மோதியது. இதில் டேங்கரின் மூடி திறந்து எரிவாயு காற்றில் பரவியதில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. இதில் அருகில் இருந்த வாகனங்களும் தீப்பற்றி எரிந்ததில் பலர் தீக்காயம் அடைந்தனர்.
சம்பவ நாளில் 11 பேரும் அதன் பிறகு 4 பேரும் உயிரிழந்தனர். இதையடுத்து நேற்று முன்தினம் 3 பேர் இறந்தனர். இந்நிலையில் 60 சதவீத...
பிரதமர் மோடியுடன் ஆந்திர முதல்வர் சந்திப்பு: சிறப்பு நிதியுதவி வழங்க கோரிக்கை
பிரதமர் நரேந்திர மோடியை ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு டெல்லியில் நேற்று முன்தினம் சந்தித்து பேசினார். அப்போது மாநிலத்தின் பல்வேறு திட்டங்களுக்கு அவர் நிதியுதவி கோரினார்.
ஆந்திராவில் ஆட்சி நடத்தும் தெலுங்கு தேசம், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கிறது. மத்திய அமைச்சரவையில் தெலுங்கு தேசம் இடம்பெற்றிருக்கிறது. இந்த சூழலில் ஆந்திர முதல்வரும் தெலுங்கு தேசம் கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடு டெல்லியில் நேற்று முன்தினம் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார். அப்போது ஆந்திராவின் பல்வேறு திட்டங்களுக்கு அவர் நிதியுதியை...
கர்நாடகாவில் காங்கிரஸ் செயற்குழுவில் இந்திய வரைபடம் தவறாக இடம்பெற்றதற்கு பாஜகவினர் எதிர்ப்பு
கர்நாடகாவில் காங்கிரஸ் செயற்குழு கூட்டம் நேற்று தொடங்கியது. இதில் வைக்கப்பட்டிருந்த பதாகையில் தவறான இந்திய வரைபடம் இடம்பெற்றது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலத்தில் உள்ள பெலகாவியில் 1924-ம் ஆண்டு டிசம்பர் 26-ம் தேதி அண்ணல் காந்தி தலைமையில் காங்கிரஸ் மாநாடு நடைபெற்றது. இதன் 100வது ஆண்டையொட்டி, அங்குகாங்கிரஸ் சிறப்பு செயற்குழு கூட்டம் அதன் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, கர்நாடக முதல்வர் சித்தராமையா, காங்கிரஸின் மூத்த தலைவர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
இதுகுறித்து...














