வேளாண்மை இணை இயக்குனர் மட்டும் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகாமை திட்ட இயக்குனர் ஆல்பர்ட் ராபின்சன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: -வேளாண்மை துறையின் கீழ் செயல்பட்டு வரும் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தின் மூலமாக அனைத்து வட்டாரங்களிலும் உள்ள விவசாயிகள் பயன்பெறும் வகையில், மாவட்டத்திற்குள் கிராம வேளாண் முன்னேற்ற குழுக்களுக்கு கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் செயல்படுத்த உள்ளது.
ரசாயன உரங்களின் பயன்பாடு குறைத்தல் பயிற்சி வழங்கிட 40 விவசாயிகள் வீதம் 27 தொழில்நுட்ப பயிற்சிகள் நடத்திட நிதி ஒதுக்கீடு ரூபாய் ஒரு லட்சத்து 80 ஆயிரம் ஆகும். அதன்படி நடப்பு ஆண்டில் பயிற்சிகள் நடைபெற்று வருகிறது. மேலும் செயல் விளக்கம் இனத்தில் பின் செய் மானியமாக ரூபாய் 4 ஆயிரம் வீதம் 220 எண்ணம் செயல் விளக்கங்களுக்கு பெறப்பட்ட நிதி ஒதுக்கீடு ரூபாய் 8 லட்சத்து 80 ஆயிரம் ஆகும். அதன்படி நடப்பாண்டில் செயல் விளக்கங்கள் நடத்தப்பட உள்ளது. நடப்பாண்டில் இத்திட்டத்தின் கீழ் மேலும் பெறப்படும் நிதி ஒதுக்கீடுகளை வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்ட வழிகாட்டு நடைமுறைகளுக்கு உட்பட்டு செயல்படுத்திட திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.