இந்தியா – சீனா தொடர்பை வெளிப்படுத்தும் யோகா: சீனா வளர்ச்சி முகமை தலைவர் பெருமிதம்

0
25

சர்வதேச யோகா தினம் ஜூன் 21 அன்று உலகம் முழுவதும் கொண்​டாடப்​படு​கிறது.

இந்​நிலை​யில் மூச்​சுப் பயிற்சி மற்​றும் யோகா பற்றி ஐ.நா. முன்னாள் அதி​காரி சித்​தார்த் சாட்​டர்ஜி எழு​திய “மை ஃபைவ் டு த்ரைவ்” என்ற நூலை சீனா சர்​வ​தேச வளர்ச்சி மற்றும் ஒத்துழைப்பு முகமை​யின் தலை​வர் லுவோ ஜாவோஹுய் பெய்​ஜிங்​கில் நேற்று முன்​தினம் வெளி​யிட்டு பேசி​ய​தாவது: சீனாவுக்கான ஐநா ஒருங்​கிணைப்​பாள​ராக இருந்த சாட்​டர்​ஜி, சீன அரசு, கல்​வித்​துறை மற்​றும் ஊடகங்​களு​டன் நெருக்​க​மாக பணியாற்​றி​னார்.

மூச்​சுப்​ப​யிற்சி மற்​றும் தியானத்தை சாட்​டர்ஜி முறை​யாக மேற்​கொண்​டார். உடல் அசைவு​கள் மற்​றும் தனது தனித்​து​வ​மான பயிற்​சி​யின் மூலம், அவர் தனது மனதை தூய்​மைப்​படுத்​த​வும், உள் மனது சுதந்​திரத்தை கண்​டறிய​வும் முயன்​றார். இது ‘பிரம்மன் மற்​றும் ஆத்​மா​வின் ஒற்​றுமை’ என்ற இந்​திய தத்​துவ உணர்வை பிர​திபலிக்​கிறது, மேலும் இது ‘விண்​ணுல​க​மும் மனிதகுல​மும் ஒன்​று’ என்ற சீன கோட்​பாட்​டுட​னும் ஒத்​துப்​போகிறது.

இந்​தி​யா​வின் ஆன்​மீக மற்​றும் உடற்​ப​யிற்சி முறை​யான யோகா, சீனா​வின் அக்​குபஞ்​சர் மற்​றும் தற்​காப்​புக் கலைகளு​டன் இணைந்​து, ‘டி​ராகன் மற்​றும் யானை​யின் நடனம்’ (சீ​னா-இந்​தியா கூட்​ட​ணி) போன்​றவை இரு நாடு​கள் இடையே​யான நாகரிக இணைப்பை வெளிப்​படுத்​துகின்​றன. இவ்​வாறு அவர் கூறி​னார்.

மூச்சுப் பயிற்சி…

இந்​நிழச்​சி​யில் சாட்​டர்ஜி பேசும்போது, ‘‘சு​வாசம் என்​பது மனித வாழ்க்​கை​யின் ஒரு முக்​கிய அங்​க​மாகும், மேலும் மூச்​சுப்​பயிற்சி நுட்​பங்​கள் சிறந்த வாழ்க்​கைக்கு உதவு​கின்​றன. நமது வாழ்க்கையின் ஒவ்​வொரு நொடி​யும் ஒரு மூச்​சுடன் தான் நகர்கிறது. பிறக்​கும் போது நமது முதல் மூச்சை இழுக்​கிறோம், இந்த உலகை விட்டு பிரி​யும்​போது நமது இறுதி மூச்சை விடுகிறோம். அந்த இரு தருணங்​களுக்​கும் இடை​யில் தான் நமது வாழ்க்​கை​யின்​ முழு கதை​யும்​ விரிவடைகிறது” என்​றார்​.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here