அமெரிக்க நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் தோசை சுட்டு வாக்கு சேகரிக்கும் வேட்பாளர்கள்

0
9

 வரும் நவம்பர் 3-ம் தேதி அமெரிக்க இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதன்படி அமெரிக்க நாடாளுமன்ற மக்கள் பிரதிநிதித்துவ சபையின் 435 இடங்களுக்கும், செனட் அவையின் 35 இடங்களுக்கும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

இந்த தேர்தலில் ஆளும் குடியரசு கட்சிக்கும் பிரதான எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சிக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. கலிபோர்னியா, டெக்சாஸ், நியூ ஜெர்ஸி, நியூயார்க், வாஷிங்டன், இலினொய், பென்சில்வேனியா, ஜார்ஜியா மாகாணங்களில் அமெரிக்க குடியுரிமை பெற்ற இந்தியர்கள் கணிசமாக வசிக்கின்றனர். அவர்களை கவரும் வகையில் ஆளும் குடியரசு மற்றும் ஜனநாயக கட்சி வேட்பாளர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மக்கள் பிரதிநிதித்துவ சபையின் டெக்சாஸ் மாவட்டம் 50 தொகுதியின் ஜனநாயக கட்சி வேட்பாளராக ஜேம்ஸ் தலாரிகோ போட்டியிடுகிறார். அண்மையில் அவர் இர்விங் நகரில் பிரச்சாரம் செய்தார். அப்போது அங்குள்ள இந்திய ஓட்டலுக்கு சென்ற அவர் மசால் தோசை சுட்டு வாக்குகளை சேகரித்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இடைத்தேர்தலின்போது கனெக்டிகட் மாகாண ஆளுநர் பதவிக்கும் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் ஆளுநர் நெட் லாமென்ட் மீண்டும் போட்டியிடுகிறார். ஹாட்போர்டு நகரில் அண்மையில் நடைபெற்ற தீபாவளி விழாவில் அவர் பங்கேற்று இந்தியர்களிடம் வாக்கு சேகரித்தார்.

மக்கள் பிரதிநிதிகள் சபையின் ஒஹியோ 1-வது மாவட்ட தொகுதியில் ஜனநாயக கட்சி வேட்பாளராக போட்டியிடும் கிரெக் லேண்ட்ஸ்மென், ஷரோன்வில்லே நகரில் உள்ள சுவாமிநாராயண் கோயிலில் வழிபாடு நடத்தினார். இதன்பிறகு அப்பகுதியை சேர்ந்த இந்தியர்களிடம் வாக்கு சேகரித்தார்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here