நாடாளு​மன்ற தேர்தலில் வெளிநாட்டு தலையீடு: இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு குற்றச்சாட்டு

0
20

இஸ்ரேல் நாடாளு​மன்ற தேர்​தலில் வெளி​நாட்டு சக்தி​களின் தலை​யீடு இருந்​த​தாக பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுகு குற்​றம் சாட்​டியுள்​ளார். இது தொடர்​பாக விசாரணை நடத்த அந்​நாட்டு தேர்​தல் ஆணை​யம் உத்தரவிட்டுள்ளது.

இஸ்ரேலில் கடந்த செவ்​வாய்க்​கிழமை நாடாளு​மன்ற தேர்​தல் நடை​பெற்​றது. இதையடுத்து வாக்குகளை எண்ணும் பணி தொடங்கியது. இது​வரை சுமார் 93% வாக்​கு​கள் எண்ணப்பட்டுள்ள நிலை​யில், பிரதமர் பெஞ்​சமின் நெதன்​யாகு தலை​மையி​லான ஆளும் கூட்​டணி 53 இடங்​களி​லும், எதிர்க்​கட்​சித் தலை​வர் காடி ஐசன்​கோட் தலை​மையி​லான எதிர்க்​கட்சி கூட்​டணி 48 இடங்களிலும் முன்​னிலை​யில் உள்​ளது. இவ்​விரு கூட்​ட​ணிகளுக்கு அடுத்​த​படி​யாக அரபுக் கட்​சிகள் 19 இடங்​களி​ல் முன்னிலை வகிக்கின்​றன.

அதி​காரப்​பூர்வ முடிவு​கள் நவம்​பர் 4-ம் தேதி வெளி​யிடப்​பட உள்ளன. இதுகுறித்து நெதன்யாகு எக்ஸ் தளத்​தில் வெளி​யிட்ட பதிவில், “அரபு கட்சிகள் வெளிநாட்டு நிதியுதவியுடன் இஸ்ரேல் தேர்தலைத் திருடிவிட்டன. இஸ்ரேல் நாடாளுமன்றத்தை கைப்பற்ற வெளிநாட்டு சக்திகள் முயற்சி செய்கின்றன. இது இஸ்ரேலை இஸ்லாமியமய​மாக்​கு​வதற்​கும், வலதுசாரி ஆட்​சியை கவிழ்ப்​ப​தற்​கும் வழிவகுத்து, அதன் மூலம் இஸ்ரேலிய பாதுகாப்புப் படையை அனைத்​துத் தளங்​களி​லும், குறிப்​பாக ஈரானில், பின்​ வாங்​கவும் தோற்​கடிக்​கவும் வைப்​ப​தாகும்” என தெரி​வித்​தார்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here