தென் கொரிய கோல் கீப்பரின் தவறு, ரால் ரேஞ்சலின் அற்புத ‘சேவ்’- அடுத்த சுற்றில் மெக்சிகோ! | FIFA WC 2026

0
21

2026 ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடரில் தென் கொரியாவுக்கு எதிராக 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற மெக்சிகோ, 32 அணிகள் இடம் பெறும் நாக்அவுட் சுற்றுக்கு தகுதி பெற்ற முதல் அணியாக சாதனை படைத்தது.

ஆட்டத்தின் 50வது நிமிடத்தில் தென் கொரிய கோல் கீப்பர் கிம் அறியாமல் செய்த தவறினால் மெக்சிகோ வீரர் லூயிஸ் ரோமோ வாய்ப்பைப் பயன்படுத்தி முதல் கோலை மெக்சிகோவுக்காக அடித்தார், அதுவே வெற்றி கோலாக அமையும் என்று அப்போது அவர்களுக்குத் தெரியாது.

மேலே எழும்பி வந்த பந்தை உயரமாக எழும்பி கையால் பிடித்தார் கொரிய கோல் கீப்பர் கிம் ஆனால் பந்து கையிலிருந்து தவறி சற்றே தள்ளி விழ அதை மெக்சிகோ ஸ்ட்ரைக்கர் லூயிஸ் ரோமோ கோல் வலைக்குள் செலுத்தினார். மெக்சிகோ 1-0.

குவாடலஹாராவில் நடைபெற்ற இந்தப் போட்டியில் தொடக்கத்தில் மெக்சிகோ ஆதிக்கம் செலுத்தியது. அதன் பின்னர் தென் கொரியா ஆட்டத்தின் கட்டுப்பாட்டை தன் வசம் கொண்டு வந்தது. முதல் பாதியின் இறுதியில் தென் கொரியாவே அதிகமாக பந்தை கட்டுப்பாட்டில் வைத்திருந்தாலும், கோல் அடிக்கும் வாய்ப்புகளை சரியாக பயன்படுத்த முடியவில்லை. இடைவேளையின் போது இரு அணிகளுமே கோலற்ற சமநிலையில் இருந்தன.

ஆட்டம் மந்தமாக இருந்தது. மெக்சிகோ கோலை நோக்கி 3 முறையே ஷாட்களை அடித்தது, அதில் இலக்கை நோக்கி ஒரே முறைதான் அடிக்கப்பட்டது, ஆனால் தென் கொரிய அணி ஆக்ரோஷம் இல்லாமல், மெக்சிகோவின் அற்புதமான தடுப்பை ஊடுருவி உள் நுழைய முடியாமல் ஏமாற்றமளித்தது.

இரண்டாம் பாதி தொடங்கிய சில நிமிடங்களிலேயே தென் கொரியாவின் கோல் கீப்பர் கிம் சுங்-கிம்மின் தவறை பயன்படுத்திக் கொண்ட லூயிஸ் ரோமோ, மெக்சிகோவுக்கான ஒரே கோலை அடித்தார். அதன்பிறகு தென் கொரியா தொடர்ந்து தாக்குதல் ஆட்டத்தை வெளிப்படுத்தியது. போட்டி முழுவதும் 58 சதவீதம் பந்தை கட்டுப்பாட்டில் வைத்திருந்தாலும், இரண்டு ஷாட்களை மட்டுமே இலக்கை நோக்கி அடிக்க முடிந்தது.

அவற்றில் ஒன்றை மெக்சிகோ கோல் கீப்பர் ரால் ரேஞ்சல் அபாரமாக தடுத்தார். இந்த சேவ் தான் மெக்சிகோவை சேவ் செய்தது. மற்றொரு கொரிய முயற்சியை டிஃபெண்டர் ஜோஹன் வாஸ்கெஸ் கோல் கோட்டிற்கு அருகில் சிறப்பாக தடுத்தார்.

கடைசி வரை கடுமையான போராட்டம் நிலவிய நிலையில், மெக்சிகோ தனது ஒரு கோல் முன்னிலையை காப்பாற்றி வெற்றியை உறுதி செய்தது. ஆட்டம் முடிந்ததும் மெக்சிகோ வீரர்கள் மகிழ்ச்சியில் கொண்டாடினர். அதே நேரத்தில், தீவிரம் இல்லாமல் ஆடித் தவிர்க்க முடியாத ஏமாற்றத்துடன் தென் கொரிய வீரர்கள் மைதானத்தில் சோகத்துடன் காணப்பட்டனர்.

இந்த வெற்றியின் மூலம் மெக்சிகோ குரூப் ஏ பிரிவில் முதலிடத்தை தக்கவைத்ததுடன், உலகக் கோப்பையின் 32 அணிகள் நாக்அவுட் சுற்றுக்கு முன்னேறிய முதல் அணியாகவும் மாறியுள்ளது. முன்னதாக நடைபெற்ற அதே பிரிவின் மற்றொரு ஆட்டத்தில் செக்கியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடித்தன. இதனால் தென் கொரியா தற்போது இரண்டாவது இடத்தில் தொடர்கிறது.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here