தமிழ்நாடு சிலம்பாட்ட கழகம் மற்றும் ஸ்ரீவேலு தேவர் அய்யா அறக்கட்டளை இணைந்து பழவிளை காமராஜர் கல்லூரி மைதானத்தில் நேற்று 600க்கும் மேற்பட்ட சிலம்பாட்ட மாணவமாணவிகள் கலந்து கொண்ட சிலம்பம் உலகசாதனை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நிலத்தடிநீரை பாதிக்கும் சீமைக்கருவேலம் மரம், ஆகாயத்தாமரை, உள்ளிச்செடி போன்றவற்றை அளிக்கும் விதமாக விழிப்புணர்வு சிலம்பப்போட்டி நடைபெற்றதாக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.