கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கோட்டார் வாகையடி தெருவைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் (வயது 50). இவர் கோட்டார் கம்பளம் ரெயில்வே ரோட்டில் பெட்டிக்கடை வைத்து நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இவரது கடைக்கு வந்த கோட்டார் பகுதியைச்சேர்ந்த என்ஜினீயரான ஹரீஸ் (28) வாழைப்பழம் கேட்டதாகவும், அதற்கு ராமகிருஷ்ணன் பணம் கேட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் ஹரீஸ் தகாத வார்த்தைகள் பேசி கண்ணாடி தம்ளரால் ராமகிருஷ்ணனை குத்தியதாக கூறப்படுகிறது. இதில் அவர் ரத்த காயம் அடைந்தார். பின்னர் ஹரீஸ் கொலை மிரட்டல் விடுத்துச் சென்றதாக தெரிகிறது. இதுகுறித்து ராமகிருஷ்ணன் கொடுத்த புகாரின்பேரில் கோட்டார் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சத்யசோபன் மற்றும் போலீசார் ஹரீஸ் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.