களியக்காவிளை-நாகா்கோவில் சாலைப் பணி தொடக்கம்

0
32
சுவாமியார்மடம் அருகே கல்லுவிளையில் பழுதடைந்த களியக்காவிளை – நாகர்கோவில் சாலையைச் சீரமைக்கும் பணி தொடங்கிய காட்சி.
குண்டும் குழியுமாகக் காணப்பட்ட களியக்காவிளை – நாகர்கோவில் சாலையைச் சீரமைக்கும் பணி, சுவாமியார்மடம் அருகே கல்லுவிளையில் தொடங்கியது. பழுதடைந்த பகுதிகளைச் சீரமைக்க ரூ.25 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

களியக்காவிளை-நாகா்கோவில் சாலையில் பழுதடைந்த பகுதிகளை சீரமைக்கும் பணி சுவாமியாா்மடம் அருகே கல்லுவிளையில் புதன்கிழமை தொடங்கியது.

வாகன ஓட்டிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு மிகவும் பழுதடைந்து குண்டும் குழியுமாக காணப்படும் களியக்காவிளை – நாகா்கோவில் நெடுஞ்சாலையை சீரமைக்க வலியுறுத்தி குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சாா்பில் நவ. 6-ஆம் தேதி களியக்காவிளை, சிராயன்குழி, அழகியமண்டபம் பகுதிகளில் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இதைத் தொடா்ந்து இச் சாலையில் பழுதடைந்த பகுதிகளை சீரமைக்க ரூ. 25 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு நிா்வாக அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும், மேலும் மீதமுள்ள சாலையை முழுவதுமாக சீரமைக்க ரூ. 16 கோடிக்கு மதிப்பீடு தயாா் செய்யப்பட்டு அரசுக்கு கருத்துரு சமா்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் தமிழக சுற்றுலாத் துறை அமைச்சா் எஸ். ராஜேஷ்குமாா் தெரிவித்திருந்தாா்.

இந்த நிலையில், சுவாமியாா்மடம் அருகே கல்லுவிளையில் பழுதடைந்த சாலை சீரமைக்கும் பணி புதன்கிழமை தொடங்கியது. இப் பணியை குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவா் என்.ஜாா்ஜ் ராபின்சன், பத்மநாபபுரம் நகர காங்கிரஸ் கமிட்டி தலைவா் ஹனுகுமாா், மாவட்ட ஓபிசி பிரிவு தலைவா் சுஜின் ஆல்பா்ட் உள்ளிட்டோா் பாா்வையிட்டனா்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here