இறச்சகுளம் அருகே மின்சாரம் தாக்கி டெம்போ ஓட்டுநர் பரிதாபமாக உயிரிழப்பு!

0
4
Tempo driver dies
Tempo driver dies

கன்னியாகுமரி மாவட்டம், இறச்சகுளம் ராஜீவ்நகர் பகுதியைச் சேர்ந்த சேகர் (45), சொந்தமாக ஆட்டோ மற்றும் டெம்போ வைத்து தொழில் செய்து வந்தார். இவருக்கு மனைவி மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர்.

இந்நிலையில், நேற்று அதிகாலை 5 மணியளவில் முக்கடல் அணை அருகே காரியங்கோணம் பகுதியில் உள்ள செங்கல் சூளைக்கு செங்கல் ஏற்றுவதற்காகத் தனது டெம்போவில் சென்றுள்ளார்.

அப்போது, அப்பகுதியில் இருட்டாக இருந்ததால் மின் சுவிட்சை இயக்கியதாகக் கூறப்படுகிறது. அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியதில் தூக்கி வீசப்பட்டார்.

இதையடுத்து, அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு பூதப்பாண்டி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், சேகர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.

தகவலறிந்து வந்த பூதப்பாண்டி போலீசார், அவரது உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here