கன்னியாகுமரி அருகே பெண் தூக்குப்போட்டு தற்கொலை

0
514

கன்னியாகுமரியை அடுத்த ஆரோக்கியபுரத்தைச் சேர்ந்தவர் லூர்து கன்சியூஸ் (வயது 48). இவருடைய மனைவி ஏஞ்சலின் நிஷா (37). இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். ஏஞ்சலின் நிஷா பல வருடங்களாக நோயினால் அவதிப் பட்டு வந்துள்ளார். நேற்று காலையில் வேலைக்கு சென்ற லூர்து கன்சியூஸ் மாலையில் வீடு திரும்பினார். ஆனால் வீட்டில் உள்ள அறையில் ஏஞ்சலின் நிஷாதூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்தலூர்து கன்சியூஸ் கதறி அழுதார். இதுபற்றி தகவல் அறிந்ததும் கன்னியாகுமரி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து உடலைகைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து ஏஞ்சலின் நிஷா தற்கொலைக்கு காரணம் என்ன? என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here