Home தேசிய செய்திகள் ‘வெளிநாட்டு ரயில்களை விட வந்தே பாரத் கட்டணம் குறைவு’

‘வெளிநாட்டு ரயில்களை விட வந்தே பாரத் கட்டணம் குறைவு’

0

ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் கூறியிருப்பதாவது: ரயில் கட்டணத்தை தீர்மானிக்கும்போது, சேவைக்கான செலவு, சேவையின் மதிப்பு, வழங்கப்படும் சேவையின் வகை மற்றும் வசதிகள், மக்களின் வாங்கும் திறன் ஆகிய அம்சங்கள் கவனத்தில் கொள்ளப்படுகின்றன.

கடந்த 2019ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட வந்தே பாரத் ரயில் சேவை 82 வழித் தடங்களில் 164 ரயில்கள் இயக்கப்படுகின்றன. 300 முதல் 400 கிலோ மீட்டர் பயணத்துக்கான வந்தே பாரத் ஏசி பெட்டிகளின் இருக்கைக்கான கட்டணம் ஒரு கிலோ மீட்டருக்கு சுமார் ரூ.2.19 ஆக உள்ளது. இது சீனா, ஜப்பான் மற்றும் பிரான்ஸ் போன்ற நாடுகளில் உள்ள இதேபோன்ற ரயில் சேவை கட்டணத்துடன் (ரூ.7 முதல் ரூ.20) ஒப்பிடும்போது மிகவும் குறைவு ஆகும்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version