Home தேசிய செய்திகள் டிஜிட்டல் அடிமைத்தனம்: ஆய்வு நடத்த கேரளா திட்டம்

டிஜிட்டல் அடிமைத்தனம்: ஆய்வு நடத்த கேரளா திட்டம்

0

கேரள பொதுக் கல்வித் துறை அமைச்சர் வி.சிவன்குட்டி திருவனந்தபுரத்தில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: ”உலகளவில் செயற்கை நுண்ணறிவு மற்றும் பிறதுறைகள் பெரும் மாற்றங்களுக்கு உள்ளாகி வரும் நேரத்தில், ‘டிஜிட்டல் அடிக் ஷன்’ பிரச்சினைக்கு தீவிர ஆய்வு மற்றும் தேவைப்பட்டால், சட்டமன்ற நடவடிக்கைகள் தேவையா என்பதை ஆராய வேண்டியுள்ளது.

கல்வித் துறைக்கு தொடர்ந்து வரும் புகார்கள் மற்றும் சில சம்பவங்கள், இந்தப் பிரச்சினையை தீவிரமாகக் கையாள வேண்டிய நேரம் வந்துவிட்டதாக காட்டுகின்றன. இந்த விவகாரம் பாடத்திட்ட குழுவிலும் விவாதிக்கப்பட்டது.

இதன் அடிப்படையில் பொதுக் கல்விச் செயலாளர் கே.வாசுகி தலைமையில் 5 பேர் கொண்ட நிபுணர் குழு அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இக்குழு குழந்தைகளிடையே காணப்படும் ‘டிஜிட்டல் அடிக் ஷன்’ குறித்து ஆராயும். மூன்று மாதங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்யும். இவ்வாறு அவர் கூறினார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version