Home தேசிய செய்திகள் பதவி நீக்க நோட்டீஸில் பிழை: சரிசெய்ய உத்தரவிட்ட ஓம் பிர்லா

பதவி நீக்க நோட்டீஸில் பிழை: சரிசெய்ய உத்தரவிட்ட ஓம் பிர்லா

0

நடாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை பேச அனுமதிக்கவில்லை என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி உள்ளன.

இந்நிலையில், சபாநாயகர் ஓம் பிர்லா ஒரு தலைப்பட்சமாக செயல்படுவதால் அவரை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி, காங்கிரஸ், சமாஜ்வாதி மற்றும் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் செவ்வாய்க் கிழமை நோட்டீஸ் வழங்கின. அதில் சில பிழைகள் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் அந்த நோட்டீஸ் நிராகரிக்கப் பட்டிருக்கலாம்.

இருப்பினும், அந்தப் பிழைகளைச் சரி செய்து, விரைவாகப் பட்டியலில் சேர்க்குமாறு அதிகாரிகளுக்கு ஓம் பிர்லா உத்தரவிட்டதாகவும் பின்னர் அந்த பிழையைச் சரி செய்து புதிய நோட்டீஸை எதிர்க்கட்சிகள் வழங்கியதாகவும் நாடாளுமன்ற வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version