பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் ஈரானுடனான நடைபெறவிருந்த இரண்டாம் கட்ட அமைதிப் பேச்சுவார்த்தைகள் கடந்த வாரம் ரத்து செய்யப்பட்டன. இதுகுறித்து அதிபர் ட்ரம்ப் தனது ‘ட்ரூத் சோஷியல்’ சமூக வலைதளப் பக்கத்தில் கூறியுள்ளதாவது: ஈரானால் ஒரு முடிவுக்கு வர முடியவில்லை.
அணுசக்தி அல்லாத ஒப்பந்தத்தில் எப்படி கையெழுத்திடுவது என்பது கூட அவர்களுக்குத் தெரியவில்லை. அவர்கள் விரைவில் புத்திசாலித்தனமாக செயல்படுவது நல்லது. ஈரானின் கடற்படை கடலுக்கடியில் உள்ளது; அவர்களின் விமானப்படை மற்றும் ரேடார் கருவிகள் அழிக்கப்பட்டுவிட்டன. ஈரானின் தலைவர்கள் இப்போது நம்முடன் இல்லை. தற்போதைய பொருளாதார முடக்கம் மிகவும் வலுவாக உள்ளது. இனி நிலைமை ஈரானுக்கு மோசமாகத்தான் அமையும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.















