ஈரானில் ரேடாரை தகர்த்த அமெரிக்க போர் விமானம்

0
15

அமெரிக்​கா​வின் எம்க்​யூ-1 ரக ட்ரோனை ஈரான் சுட்டு வீழ்த்​தி​யதற்கு பதிலடியாக, ஈரானின் வான் பாது​காப்பு கருவிகள், தொலை தொடர்பு கோபுரங்​களை அமெரிக்​கப் படைதகர்த்​தது.

அமெரிக்​கா​வின் எம்க்​யூ-1 ரக ட்ரோன் சர்​வ​தேச கடல் பகு​தி​யில் கண்​காணிப்​பில் ஈடு​பட்​டது. இதை ஈரான் சில நாட்​களுக்கு முன்பு சுட்டு வீழ்த்​தி​யது. ஈரான் வான் எல்​லைக்​குள் நுழைந்​த​தால் சுட்டு வீழ்த்​தினோம் என ஈரான் கூறியது.

இதற்கு பதிலடி​யாக ஈரானின் கோருக் மற்​றும் கேஷ்ம் தீவு பகுதியில் உள்ள வான் பாதுகாப்பு கருவி​கள், தரைகட்​டுப்​பாட்டு மையங்​கள், ஈரானின் சிரிக் தீவில் உள்ள தகவல் தொடர்பு கோபுரம் ஆகிய​வற்றை அமெரிக்க போர் விமானம் கடந்த சனி மற்​றும் ஞாயிற்று கிழமை​களில் குண்டு வீசி தகர்த்​தது.

ஈரான் மீதான தாக்​குதலை அமெரிக்கா தொடர்ந்​தால், பதிலடி முற்​றி​லும் வேறு​வித​மாக இருக்​கும் என ஈரான் கூறி​யுள்​ளது. ஈரான் – அமெரிக்கா இடையே போர் நிறுத்த பேச்​சு​வார்த்தை நடந்தா​லும், இது போன்ற தாக்​குதல்​கள்​ அவ்​வப்​போது நடை​பெறுகின்​றன.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here