அமெரிக்காவின் எம்க்யூ-1 ரக ட்ரோனை ஈரான் சுட்டு வீழ்த்தியதற்கு பதிலடியாக, ஈரானின் வான் பாதுகாப்பு கருவிகள், தொலை தொடர்பு கோபுரங்களை அமெரிக்கப் படைதகர்த்தது.
அமெரிக்காவின் எம்க்யூ-1 ரக ட்ரோன் சர்வதேச கடல் பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டது. இதை ஈரான் சில நாட்களுக்கு முன்பு சுட்டு வீழ்த்தியது. ஈரான் வான் எல்லைக்குள் நுழைந்ததால் சுட்டு வீழ்த்தினோம் என ஈரான் கூறியது.
இதற்கு பதிலடியாக ஈரானின் கோருக் மற்றும் கேஷ்ம் தீவு பகுதியில் உள்ள வான் பாதுகாப்பு கருவிகள், தரைகட்டுப்பாட்டு மையங்கள், ஈரானின் சிரிக் தீவில் உள்ள தகவல் தொடர்பு கோபுரம் ஆகியவற்றை அமெரிக்க போர் விமானம் கடந்த சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் குண்டு வீசி தகர்த்தது.
ஈரான் மீதான தாக்குதலை அமெரிக்கா தொடர்ந்தால், பதிலடி முற்றிலும் வேறுவிதமாக இருக்கும் என ஈரான் கூறியுள்ளது. ஈரான் – அமெரிக்கா இடையே போர் நிறுத்த பேச்சுவார்த்தை நடந்தாலும், இது போன்ற தாக்குதல்கள் அவ்வப்போது நடைபெறுகின்றன.
