Home உலக செய்திகள் வளை​குடா நாடு​களின் உள்​கட்டமைப்​பை அழிப்​போம்: ஈரான் ராணுவம் பகிரங்க எச்சரிக்கை

வளை​குடா நாடு​களின் உள்​கட்டமைப்​பை அழிப்​போம்: ஈரான் ராணுவம் பகிரங்க எச்சரிக்கை

0

வளை​குடா நாடு​களின் உள்​கட்​டமைப்​பு​களை அழித்து தரைமட்​ட​மாக்​கு​வோம் என்று ஈரான் ராணுவம் எச்​சரிக்கை விடுத்​துள்​ளது.

கடந்த பிப்​ர​வரி 28ம் தேதி முதல் அமெரிக்​கா, ஈரான் இடையே போர் நடை​பெற்று வந்​தது. பல்​வேறு திருப்​பங்​களுக்​குப் பிறகு கடந்த ஜூன் 17ம் தேதி இரு நாடு​கள் இடையே தற்​காலிக அமைதி ஒப்​பந்​தம் கையெழுத்​தானது. இதன்​பிறகு தங்​கள் எல்​லையை ஒட்டி ஹார்​முஸ் ஜலசந்தி வழி​யாகவே எண்​ணெய் கப்​பல்​கள் கடந்து செல்ல வேண்​டும் என்று ஈரான் ராணுவம் கட்​டுப்​பாடு விதித்​தது.

இதை மீறி ஓமன் கடல் வழி​யாக சென்ற எண்​ணெய் கப்​பல்​கள் மீது ஈரான் ராணுவம் தாக்​குதல் நடத்​தி​யது. இதன்​காரண​மாக தற்காலிக அமைதி ஒப்​பந்​தம் ரத்து செய்​யப்​படு​வ​தாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கடந்த 8-ம் தேதி அறி​வித்​தார். இதன்​பிறகு அமெரிக்​கா, ஈரான் இடையே தீவிர போர் நடை​பெற்று வருகிறது. ஹார்​முஸ் ஜலசந்​தி​யின் இரு புறத்​தை​யும் அமெரிக்க போர்க் ​கப்​பல்​கள் முற்​றுகை​யிட்டு உள்​ளன.

ஈரான் தலைநகர் டெஹ்​ரான் மற்​றும் அந்​நாட்​டின் வடக்கு பகுதியில் அமைந்​துள்ள ராணுவ தளங்​கள், ஏவு​கணை, ட்ரோன் உற்​பத்தி ஆலைகள், துறை​முக பகு​தி​களை குறி​வைத்து அமெரிக்க போர் விமானங்​கள் நேற்று குண்​டுமழை பொழிந்​தன. அமெரிக்க தாக்​குதலில் ஈரானில் இது​வரை 35 பேர் உயிரிழந்திருப்​ப​தாக​வும் 300-க்​கும் மேற்​பட்​டோர் படு​கா​யம் அடைந்​திருப்​ப​தாக​வும் தகவல்​கள் வெளி​யாகி உள்​ளன.

கரீபியன் பகுதி நாடான கோர்​சாவை சேர்ந்த எண்​ணெய் கப்​பல் நேற்று ஈரானின் கார்க் தீவை நோக்கி சென்று கொண்​டிருந்​தது. இந்த கப்​பலின் இன்​ஜின் பகு​தியை குறி​வைத்து அமெரிக்க போர் விமானம், ஏவு​கணை தாக்​குதலை நடத்​தி​யது. இதனால் அந்த கப்பல் நடு​வழி​யில் நின்​றது. மேலும் ஈரான் துறை​முகம் நோக்கி சென்ற பல்​வேறு எண்​ணெய் கப்​பல்​களை அமெரிக்க போர்க்​கப்​பல்​கள் இடைமறித்து திருப்பி அனுப்​பின.

அமெரிக்க தாக்​குதலுக்கு பதிலடி​யாக குவைத்​தில் உள்ள அமெரிக்க விமானப் படைத் தளத்தை குறி​வைத்து ஈரான் ராணுவம் நேற்று ஏவு​கணை​களை வீசி​யது. மேலும் ஜோர்​டான், பஹ்ரைன், இராக், குவைத் நாடு​களில் உள்ள அமெரிக்க விமானப் படைத் தளங்​கள் மீது ஈரான் ராணுவம் நேற்று ட்ரோன் மூலம் தாக்குதல் நடத்​தி​யது.

ஈரான் ராணுவ செய்​தித் தொடர்​பாளர் இப்​ராகிம் ஸோல்​ப​காரி, டெஹ்​ரானில் நேற்று நிருபர்​களிடம் கூறிய​தாவது: ஹார்​முஸ் ஜலசந்தி ஈரானுக்கு சொந்​த​மானது. இந்த ஜலசந்​தியை யாரும் உரிமை கொண்​டாட முடி​யாது. இதை யாருக்​கும் விட்​டுக் கொடுக்க மாட்​டோம். ஈரானின் உள்​கட்​டமைப்​பு​களை அமெரிக்கா அழித்​தால் வளை​கு​டா​வில் உள்ள அமெரிக்​கா​வின் நட்பு நாடு​களின் அனைத்து உள்​கட்​டமைப்​பு​களை​யும் அழித்து தரைமட்​ட​மாக்​கு​வோம்.

எங்​களது முழு பலத்​தை​யும் பயன்​படுத்தி எதிரி​கள் மீது தாக்​குதல் நடத்​து​வோம். இவ்​வாறு இப்​ராகிம் ஸோல்​ப​காரி தெரி​வித்​தார்.

வளை​குடா நாடு​களின் எண்​ணெய் வயல்​கள், கச்சா எண்​ணெய் சுத்​தி​கரிப்பு நிலை​யங்​கள், சேமிப்பு கிடங்​கு​கள் மீது தாக்​குதல் நடத்​து​வோம் என்று ஈரான் ராணுவம் மறை​முக​மாக எச்​சரிக்கை விடுத்​திருக்​கிறது. இதனால் வளை​கு​டா​வில் பதற்​றம் அதி​கரித்து வரு​கிறது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version