Home விளையாட்டு செய்திகள் சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ்: முதல் சுற்றில் டி.குகேஷ் டிரா

சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ்: முதல் சுற்றில் டி.குகேஷ் டிரா

0

சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் போட்டி வேளச்சேரி​யில் நேற்று தொடங்​கியது. முதல் சுற்​றில் உலக சாம்பியனான இந்​தி​யா​வின் டி.குகேஷ், சகநாட்​டைச் சேர்ந்த கிராண்ட் மாஸ்​ட​ரான நிஹால் சரினுடன் மோதி​னார். இந்த ஆட்டம் 47-வது நகர்த்​தலின் போது டிரா ஆனது. இதனால் இரு வருக்​கும் தலா 0.5 புள்​ளி​ வழங்​கப்பட்​டது.

உஸ்​பெகிஸ்​தான் கிராண்ட் மாஸ்​ட​ரான நோதிர்​பெக் அப்​துசத்​தோரோவ், அமெரிக்க கிராண்ட் மாஸ்​ட​ரான ஹான்ஸ் நீமனுடன் மோதிய ஆட்​டம் 44-வது நகர்த்​தலின் டிரா​வில் முடிவடைந்​தது. இந்திய கிராண்ட் மாஸ்​ட​ரான அர்​ஜூன் எரி​கைசி, ரஷ்ய கிராண்ட் மாஸ்​ட​ரான டிமிட்ரி ஆண்ட்​ரெய்​கின் மோதிய ஆட்டமும் 42-வது நகர்த்​தலின் போது ஆட்​டத்தை டிரா ஆனது.

கடந்த ஆண்டு சாலஞ்​சர் பிரி​வில் சாம்​பியன் பட்​டம் வென்​றிருந்த இந்​திய கிராண்ட் மாஸ்​ட​ரான எம்​.பிரணேஷ் தனது முதல் சுற்​றில் பிரான்​ஸின் அலிரேசா ஃபிரோஜாவுடன் பலப்​பரீட்சை நடத்தினார். இதில் கருப்பு காய்​களு​டன் விளை​யாடிய அலிரேசா ஃபிரோஜா 79-வது நகர்த்​தலின் போது வெற்றி பெற்​றார். இதனால் அவர், முழு​மை​யாக ஒரு புள்​ளியை பெற்​றார். இன்று 2-வது சுற்​று ஆட்​டங்​கள்​ நடை​பெறுகின்​றன.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version