Home விளையாட்டு செய்திகள் எம்.சி.சி-முருகப்பா கோப்பை ஹாக்கி: சென்னையில் இன்று தொடக்கம்

எம்.சி.சி-முருகப்பா கோப்பை ஹாக்கி: சென்னையில் இன்று தொடக்கம்

0

அகில இந்​திய எம்​சிசி-முருகப்பா தங்​கக் கோப்பை ஹாக்கி தொடரின் 97-வது சீசன் சென்னை எழும்​பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்​ணன் மைதானத்​தில் இன்று (22-ம் தேதி) தொடங்​கு​கிறது.

வரும் நவம்​பர் 1 வரை நடை​பெறும் இந்​தத் தொடரில் 10 அணிகள் கலந்து கொள்​கின்​றன. சர்​வ​தேச அணி​யாக மலேசியா 2-வது முறை​யாக பங்​கேற்​கிறது. இந்​தத் தொடரில் சாம்​பியன் பட்​டம் வெல்​லும் அணிக்கு ரூ.7 லட்​சமும், 2-வது இடம் பிடிக்​கும் அணிக்கு ரூ.5 லட்​சமும் பரிசு வழங்​கப்​படும். மேலும், அரையிறுதி​யில் தோல்வி அடையும் அணிகள் தலா ரூ.50 ஆயிரம் பெறும்.

இந்​தத் தொடரில் கலந்​து​கொள்​ளும் 10 அணிகள் 2 பிரிவுளாக பிரிக்​கப்​பட்​டுள்​ளன. ‘ஏ’ பிரி​வில் இந்​திய ரயில்வே, இந்​தி​யன் ஆயில் கார்ப்​பரேஷன் லிமிடெட், இந்​திய ராணுவம், பஞ்​சாப் நேஷனல் வங்கி, ஹாக்கி கர்​நாடகா ஆகிய அணிகள் இடம் பெற்​றுள்​ளன.

‘பி’ பிரி​வில் இந்​திய கடற்​படை, மலேசியா, சாய், பாரத் பெட்​ரோலியம் கார்ப்​பரேஷன் லிமிடெட், தமிழ்​நாடு ஆகிய அணிகள் உள்​ளன. போட்​டிகள் லீக் மற்​றும் நாக்-அவுட் முறை​யில் நடத்​தப்​படு​கின்றன. இரு பிரிவு​களி​லும் முதல் இரண்டு இடங்​களைப் பிடிக்​கும் அணிகள் அரை இறுதிக்கு முன்​னேறும். அரை இறுதி ஆட்​டங்​கள் 31-ம் தேதி நடை​பெறுகின்​றன. இறுதிப்​போட்டி நவம்​பர் 1-ல் நடை​பெறுகிறது.

தொடக்க நாளான இன்று மாலை 4.15 மணிக்கு நடை​பெறும் ஆட்​டத்​தில் தமிழ்​நாடு – சாய் அணிகள் மோதுகின்​றன. மாலை 6 மணிக்கு நடை​பெறும் மற்​றொரு ஆட்​டத்​தில் இந்​திய ராணுவம் – கர்​நாடகா அணிகள் பலப்​பரீட்சை நடத்து​கின்​றன.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version