உ.பி. கிராமத்தில் 50 ஆண்டுகளாக தொடரும் மதநல்லிணக்க பணி: ரமலான் நோன்புக்காக முஸ்லிம்களை எழுப்பும் குலாப் யாதவ் 

0
41

உ.பி. கிராமம் ஒன்றில் ரமலான் மாத நோன்புக்காக முஸ்லிம் களை ஓர் இந்து விவசாய குடும் பம் அதிகாலையில் எழுப்பி வரு கிறது. கடந்த 50 ஆண்டுகளாக இந்த மதநல்லிணக்கப் பாரம்பரி யம் தொடர்கிறது.

உ.பி.யின் வாராணசி அருகே உள்ள ஆசம்கர் மாவட்டத்தின் முபாரக்பூர் நகரம் பனாரஸ் பட்டு சேலை நெசவுக்கு பெயர் பெற் றது. இதன் ஒரு பகுதியான கவுடியா கிராமத்தில் குலாப் யாதவ் (45) குடும்பம் வசிக்கிறது.

இந்நிலையில் புனித ரமலான் மாதத்தில் குலாப் யாதவ் தனது 12 வயது மகன் அபிஷேக் யாதவுடன் அதிகாலை 2.30 மணிக்கு டார்ச் லைட், கம்புடன் வீட்டிலிருந்து புறப்படுகிறார். முஸ்லிம் வீடுகளின் கதவுகளை தட்டி ரமலான் நோன்புக்காக அவர்களை எழுப்புகிறார்.

ரமலான் மாதத்தில் முஸ்லிம் கள் அதிகாலை சூரிய உதயத் திற்கு முன் எழுந்து உணவருந்தி நோன்பை தொடங்குகின்றனர். பிறகு நாள் முழுவதும் நீரையும் பருகாத இவர்கள், மாலை 6.30 மணியளவில் நோன்பை முடிக் கின்றனர்.

இதன் களைப்பில் பலரும் அதிகாலையில் குறித்த நேரத் தில் எழுவது சிரமம் என்பதால் அவர்களுக்கு குலாப் யாதவ் உதவுகிறார்.

டெல்லியில் கட்டிடப்பணி செய்யும் குலாப் யாதவ், ஒவ் வொரு ஆண்டும் இதற்காகவே ஒரு மாதம் விடுப்பு எடுத்துக் கொண்டு வருகிறார். இவரது குடும்பத்தில் கடந்த 1975 முதல் அதாவது கடந்த 50 வருடங்களாக இந்த மத நல்லிணக்கப் பணி தொடர்கிறது.

இதுகுறித்து குலாப் யாதவ் கூறும்போது, “நான் சிறுவனாக இருந்தபோது எனது தந்தை சிர்கித் யாதவ் என்னை உடன் அழைத்துச் சென்று முஸ்லிம் களை எழுப்புவார். இதன் முக் கியத்துவம் பிறகுதான் எனக் குத் தெரியவந்தது. நான் இப் போது எனது 12 வயது மகனை உடன் அழைத்துச் சென்று எழுப்புகிறேன்’ என்றார்.

சுமார் 4,000 முஸ்லிம்கள் வாழும் கவுடியா கிராமத்தில் சுமார் 200 இந்துக்களும் வசிக் கின்றனர். நாட்டின் சுதந்திரத் திற்கு பிறகு இங்கு மதக் கலவரம் எதுவும் நடைபெற்ற தில்லை. குலாப் யாதவை தங் கள் குடும்ப உறுப்பினராக கருது வதாக கவுடியா கிராம முஸ்லிம் கள் கூறுகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here