ராஜஸ்தான் ரயில் பாதை குண்டுவெடிப்பு தொடர்பாக பாகிஸ்தானுடன் தொடர்புடைய இருவர் பஞ்சாபில் கைது

0
16

ராஜஸ்தானின் ஸ்ரீகங்​காநகர் ரயில் பாதை குண்டுவெடிப்பு வழக்​கில், பாகிஸ்தானில் உள்​ளவர்​களு​டன் தொடர்​பி​லிருந்த பெண் உட்​பட இரு​வர் பஞ்சாபில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ராஜஸ்​தான் தீவிர​வாதத் தடுப்​புப் படை, ஸ்ரீ கங்​காநகர் காவல்துறை, பஞ்​சாப் காவல் துறை இணைந்து நடத்​திய நடவடிக்கை​யில், 21 வய​தான மஹக்​தீப் கவுர், 22 வய​தான தவீந்தர் சிங் ஆகியோர் கைது செய்​யப்​பட்​டனர். இதில் மஹக்​தீப் கவுர், பாகிஸ்தானைச் சேர்ந்த ‘சாச்சா, ஷா’ ஆகிய இரு​வருடன் தொடர்​பில் இருந்​தது விசா​ரணை​யில் தெரிய​வந்​துள்​ளது.

காதல் மொழிகளாலும் பணத்​தா​லும் அவரைத் தங்​கள் வலை​யில் வீழ்த்​திய இவர்​கள், ரயில் பாதையில் குண்​டுவெடிப்பு நடத்த அவருக்​குப் பணம் கொடுத்​துள்ளனர். இவரிட​மிருந்து 2 ஆயுதங்கள், 46 தோட்​டாக்​கள், ரூ.30,000 ரொக்​கம் பறி​முதல் செய்யப்​பட்​டுள்​ளன. இவருக்​குத் தங்​குமிடம், மோட்​டார் சைக்கிள், குற்​றம் நடந்த இடத்​துக்​குச் செல்​லப் போக்​கு​வரத்து வசதி ஆகிய​வற்றை வழங்கி உதவிய​தாக சந்​தேகிக்​கப்​படும் மேலும் மூவரைக் காவல் துறை பிடித்து விசா​ரித்து வரு​கிறது.

இத்​தகைய முறையை பாகிஸ்​தான் உளவு அமைப்​பான ஐஎஸ்ஐ அடிக்​கடி கையாள்​வ​தாகக் காவல் துறை கூறியுள்​ளது. ஸ்ரீகங்கா நகரைச் சேர்ந்த பபிதா என்ற பெண்​ணை​யும் ஐஎஸ்ஐ இதே முறையில் வலை​யில் வீழ்த்​தி​ய​தாக காவல் துறை முன்​னதாக தெரிவித்திருந்​தது. கவுர் தனது கணவரைப் பிரிந்து தனியாக வசித்து வந்​தார். அவருடைய கணவர் போதைப்​பொருள் கடத்​தல் தொடர்​பான வழக்​கு​களில் தற்​போது சிறை​யில் உள்​ளார்.

ராஜஸ்தானின் ஸ்ரீகங்​காநகர் அருகே உள்ள ராம்​சிங்​புர் பகுதி​யில் நவம்​பர் 3-ம் தேதி இரவு 9.45 மணி​யளவில் இந்​தத் தண்​ட​வாள குண்​டுவெடிப்பு நிகழ்ந்​தது. இதில் ரயில் பாதையின் இரு சிலீப்​பர் கட்​டைகள் நொறுங்​கின. தண்​ட​வாளம் சேதமடைந்​தது. 2.5 அடி ஆழத்​துக்​குப் பள்​ளம் ஏற்பட்டது.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here