5,835 இடங்களில் பயிர்க்கழிவு எரித்ததாக பஞ்சாபில் இதுவரை ரூ.1 கோடி அபராதம் விதிப்பு

0
7

பஞ்​சாபில் நெல் அறு​வடைக்​குப் பிறகு பயிர்க்கழிவுகளை (வைக்கோல்) எரித்​த​தாக இது​வரை 5,835 சம்பவங்​கள் பதிவாகி​யுள்​ளன.

இது​தொடர்​பாக ரூ.1.08 கோடிக்​கும் அதி​க​மாக அபராதம் விதிக்கப்​பட்​டுள்​ளது. இது​குறித்து காற்​றுத் தர மேலாண்மை ஆணை​யம் (சிஏகியூஎம்) வெளி​யிட்​டுள்ள அறிக்​கை​யில் கூறப்பட்டுள்​ள​தாவது: பஞ்​சாபின் 23 மாவட்​டங்​களி​லும் சேர்த்து மொத்​தம் 5,835 பயிர்க்​கழிவு எரிப்​புச் சம்​பவங்​கள் பதிவாகியுள்ளன.

இதில் அதி​கபட்​ச​மாக பாட்​டி​யாலா மாவட்​டத்​தில் 391 சம்​பவங்​கள் பதிவாகி​யுள்​ளன. மாநிலம் முழு​வதும் பதிவான சம்​பவங்​களில் 5,539 இடங்​களில் நேரடி கள ஆய்வு மேற்​கொள்​ளப்​பட்​டதில், 2,442 இடங்​களில் பயிர்க்​கழிவு​கள் எரிக்​கப்​பட்​டது உறுதி செய்யப்பட்டுள்​ளது.

காற்று மாசுபாட்​டைக் கட்​டுப்​படுத்​தவும், பயிர்க்​கழிவு​கள் எரிப்பதைத் தடுக்​கவும் விவசாயிகள் மற்​றும் அலட்​சி​ய​மாக செயல்​பட்ட அதி​காரி​கள் மீது கடும் நட​வடிக்கை எடுக்​கப்​பட்டு வரு​கின்​றன. மாநிலம் முழு​வதும் 2,152 வழக்​கு​களில் சுற்​றுச்​சூழல் இழப்​பீடாக மொத்​தம் ரூ.1,08,55,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இதில் இது​வரை ரூ.40,40,000 வசூலிக்​கப்​பட்​டுள்​ளது. பயிர்க்​கழிவு எரிப்பு தொடர்​பாக 1,834 முதல் தகவல் அறிக்​கைகள் பதிவு செய்யப்​பட்​டுள்​ளன. மேலும், சம்​பந்​தப்​பட்ட விவசாயிகளின் வருவாய்த் துறை ஆவணங்​களில் 2,015 வழக்​கு​களில் ‘சிவப்​புக் குறியீடு’ பதிவு செய்​யப்​பட்​டுள்​ளது. இவ்​வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here