‘காங்கிரஸ் திட்டங்களை ட்ரம்ப் காப்பி அடிக்கிறார்’ – 5000 டாலர் வாக்குறுதி குறித்து டி.கே.சிவகுமார் விமர்சனம்

0
24

கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் அரசு செயல்படுத்தி வரும் நலத்திட்ட உத்திகளையும் உத்தரவாதத் திட்டங்களையும் பார்த்துதான், பிற மாநிலங்களும் ஏன் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பும் கூடத் திட்டங்களைத் தீட்டி வருவதாகக் கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமார் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் நடைபெறவுள்ள இடைக்கால தேர்தலை முன்னிட்டுப் பிரச்சாரம் மேற்கொண்ட அதிபர் டொனால்ட் ட்ரம்ப், குடியரசுக் கட்சி வெற்றி பெற்றால் ஒவ்வொரு அமெரிக்க குடிமகனுக்கும் ‘ட்ரம்ப் டிவிடெண்ட்’ என்ற பெயரில் 5,000 அமெரிக்க டாலர்கள் வழங்கப்படும் என அறிவித்திருந்தார்.

இதைச் சுட்டிக்காட்டிப் பேசிய கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமார், காங்கிரஸின் நலத்திட்ட மாடலைத் தான் அமெரிக்க அதிபர் பின்பற்றுவதாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும், “மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் பிஹார் ஆகிய மாநிலங்கள் ஏற்கனவே எங்கள் திட்டத்தைப் பார்த்துப் நகலெடுத்தன. இப்போது அமெரிக்க அதிபர் ட்ரம்பும் காங்கிரஸின் உத்தரவாத மாதிரியைக் காப்பி அடிக்கத் தொடங்கியுள்ளார். இதுவே காங்கிரஸ் கட்சியின் வலிமைக்கு சான்றாகும், இன்றைக்கு உலக நாடுகள் அனைத்தும் இந்திய அரசியலமைப்பை உற்றுநோக்குகின்றன” என்று அவர் தெரிவித்துள்ளார்.

அதே நிகழ்வில் பேசிய டி.கே. சிவகுமார், பாஜக அரசு இந்துத்துவாவையும் மதத்தையும் அரசியல் ஆதாயத்திற்காகப் பயன்படுத்துவதாகக் குற்றம் சாட்டினார். ராமர் கோயிலுக்காக பொதுமக்கள் வழங்கிய நிதியையும் செங்கற்களையும் தவறாகப் பயன்படுத்தியதாக சாடிய அவர், காங்கிரஸ் கட்சி சாதி மத வேறுபாடின்றி அனைத்து தரப்பு மக்களுக்கும் உண்மையாகச் சேவை செய்வதாகக் குறிப்பிட்டார். மேலும் மத்திய அரசின் உஜ்வாலா திட்டம் தோல்வியடைந்து சமையல் எரிவாயு விலை உயர்ந்துள்ளதாகவும் அவர் விமர்சித்தார்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here