அரசியலமைப்பை அவமதிக்கும் பாஜக: காங்கிரஸ் மூத்த தலைவர்கள் குற்றச்சாட்டு

0
17

1949-ம் ஆண்டு நவம்​பர் 26-ம் தேதி இந்​திய அரசியலமைப்புச் சட்​டம் அரசி​யலமைப்பு நிர்​ணய சபையால் ஏற்றுக்​கொள்​ளப்​பட்​டது. இதை நினைவு​கூரும் வகை​யில் ஒவ்வொரு ஆண்​டும் நவம்​பர் 26-ம் தேதி இந்திய அரசியலமைப்பு தினம் கொண்​டாடப்​படு​கிறது.

இதை​யொட்டி மக்​களவை எதிர்க்​கட்சி தலை​வர் ராகுல் காந்தி எக்ஸ் தளத்​தில் வெளி​யிட்ட பதி​வில், “இந்​திய அரசி​யலமைப்​புச் சட்​டம் வெறும் புத்​தகம் மட்​டுமல்ல; அது தேசத்​தின் ஆன்மா; ஒவ்வொரு குடிமக​னின் கண்​ணி​யத்​துக்​கான கேடயம்; ஒவ்​வொரு குரலின் வலிமை; நீதி, சுதந்​திரம், சமத்​து​வம் மற்​றும் சகோ​தரத்​து​வத்​தின் பாது​காவலர்; அநீதிக்கு எதிரான நமது மாபெரும் ஆயுதம்.

அரசி​யலமைப்பு தினத்​தன்று, எனது உறுதி​மொழியைப் புதுப்பிக்கிறேன்; எல்​லாச் சூழ்​நிலைகளி​லும் நாம் அதை (அரசியலமைப்பு) பாது​காப்​போம், ஒவ்​வொரு இந்​தி​யனின் உரிமை​களுக்​காகவும் தொடர்ந்து போராடுவோம்” என கூறியுள்ளார். காங்​கிரஸ் தலை​வர் மல்​லிகார்​ஜுன கார்கே,“அரசியலமைப்பு தினட நவீன இந்​தி​யா​வுக்கு அடித்தளமிட்ட அனைத்து தலை​வர்​களுக்​கும் வணக்​கம் செலுத்துகிறேன்.

இன்று, அரசி​யலமைப்​பின் அடிப்​படைக் கொள்​கைகளான நீதி, சுதந்​திரம், சமத்​து​வம், சகோ​தரத்​து​வம், மதச்​சார்​பின்மை மற்​றும் சோஷலிசம் ஆகிய​வற்​றைப் பாது​காப்​பதே நமது மிகப்​பெரிய தேசி​யப் பொறுப்​பாகும். அரசி​யலமைப்​பையும் ஜனநாயகத்தையும் பாது​காக்​கவும், நாட்​டின் ஒற்​றுமை, ஒருமைப்பாடு மற்​றும் நல்​லிணக்​கத்​தைப் பேணவும் அரசியலமைப்பை பாது​காப்​போம்” என தெரி​வித்​தார்.

காங்​கிரஸ் பொதுச்​செய​லா​ளர் கே.சி. வேணுகோபால், “அரசியலமைப்பு தினத்தை முன்​னிட்டு லக்​னோவில் `சம்​விதான் ரக் ஷா மார்ச்’ நடத்த திட்​ட​மிட்​டிருந்​தோம். ஆனால் இதற்கு அனுமதி மறுக்​கப்​பட்​டது. இது அரசி​யலமைப்​பின் மீது பாஜக-ஆர்எஸ்எஸ் அமைப்​பு​கள் கொண்​டிருக்​கும் அவ​மதிப்​பையும் அக்கறை​யின்​மையையும் காட்​டு​கிறது. இருப்​பினும் நாங்​கள் பின்​வாங்க மாட்​டோம்” என்று கூறினார்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here