மேற்கு வங்கத்துக்கு ரூ.1 லட்சம் கோடி மதிப்பிலான புதிய சாலைத் திட்டங்கள் நிறைவேற்றப்படும் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி நேற்று அறிவித்தார்.
ஏற்கனவே நடைபெற்று வரும் ரூ.35,000 கோடி மதிப்பிலான பணிகளுடன் இவை கூடுதலாகும். கொல்கத்தா வட்டச் சாலைக்கு மட்டும் ரூ.14,000 கோடி ஒதுக்கப்பட உள்ளது. கோலாகாட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில், முதல்வர் சுவேந்து அதிகாரி முன்னிலையில் பேசிய கட்கரி, மாநிலத்தின் சாலை உள்கட்டமைப்பை வலுப்படுத்த மத்திய அரசு உறுதிபூண்டுள்ள தாகக் கூறினார்.
அண்டை மாநிலங்களுடனான இணைப்பை மேம்படுத்தும் திட்டங்களை விரைவுபடுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். இந்த அறிவிப்புகளை வரவேற்ற முதல்வர் சுவேந்து அதிகாரி, திட்டங்கள் உரிய நேரத்தில் நிறைவேற்றப்படுவதை உறுதிசெய்ய மாநில அரசு அனைத்து உதவிகளையும் வழங்கும் என்றார். நிலம் கையகப்படுத்தி வழங்குவது, அனுமதிகளை விரைவாக வழங்குவது உள்ளிட்ட பணிகளில் மாநில அரசு முழு ஒத்துழைப்பு அளிக்கும் என்றும் அவர் உறுதியளித்தார்.














