அமெரிக்கா – இந்தியா இடையே விரைவில் வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்து: அதிபர் டொனால்டு ட்ரம்ப் தகவல்

0
19

அமெரிக்கா – இந்தியா இடையே விரைவில் வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகும் என அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்​கா​வின் வாஷிங்​டனில் உள்ள வெள்ளை மாளி​கை​யில் அதிபர் டொனால்டு ட்​ரம்ப் செய்​தி​யாளர்​களுக்கு பேட்டி அளித்தார். அப்​போது, அமெரிக்கா, இந்​தி​யா​வுடனான வர்த்​தக ஒப்​பந்​தம் பற்​றிய கேள்​விக்கு ட்​ரம்ப் அளித்த பதி​லில், “அவர்​கள் அமெரிக்​கா​வுடன் ஒப்​பந்​தம் செய்ய விரும்​பு​கிறார்​கள். நாங்களும் ஒப்​பந்​தம் செய்​யப் போகிறோம். ஒப்​பந்​தம் இறுதி செய்​வதற்கு மிக அரு​கில் இருக்​கிறோம். இது​வரை நாங்​கள் செய்த ஒப்​பந்​தகளில் இருந்து இது மிகவும் வித்​தி​யாச​மானதாக இருக்​கப் போகிறது” என்​றார்.

வர்த்​தகம், எரிசக்தி, தொழில்​நுட்​பம், பாது​காப்பு மற்​றும் மக்​கள் இடையேயான உறவு​கள் போன்ற துறைகளில் இருதரப்பு உறவு​களை மேலும் வலுப்​படுத்​து​வது குறித்து விவாதிக்க அமெரிக்க வெளி​யுறவுத்​துறை அமைச்​சர் மார்கோ ரூபியோ இந்​தி​யாவில் சுற்​றுப்​பயணம் மேற்​கொண்​டுள்ள தருணத்​தில் ட்​ரம்ப் இவ்​வாறு தெரி​வித்​துள்​ளார்.

இந்த மாதத்​தின் தொடக்​கத்​தில் அமெரிக்கா சென்​றிருந்த மத்​திய வர்த்​தக அமைச்​சர் பியூஷ் கோயல், அந்​நாட்டு வர்த்​தகப் பிரதி​நிதி ஜேமிசன் கிரீரைச் சந்​தித்​துப் பேசினார். அப்​போது, வர்த்​தக ஒப்​பந்​தத்​தின் நுணுக்​க​மான அம்​சங்​களைப் பற்றி இரு​வரும் விவாதித்​தனர். இதையடுத்து, பியூஷ் கோயல், “இந்​தியா-அமெரிக்கா இடை​யி​லான வர்த்​தக ஒப்​பந்​தத்​தின் முதல் பகுதி இறுதி செய்​யப்​பட்டு, தற்​போது சட்​டப்​பூர்வ வரைவு தயாரிப்​புப் பணிகள் நடை​பெற்று வரு​கின்​றன. இந்​தச் செயல்​முறையை அரசு விரைவில் நிறைவு செய்​யும் என்று நம்​பு​கிறேன்” என கூறியிருந்​தார்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here