மூலச்சல் பகுதியைச் சேர்ந்த 19 வயது கல்லூரி மாணவி கிரிஸ்மா, செல்போன் பயன்படுத்தியதால் தாயார் கண்டித்ததால் கோபமடைந்து வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து பார்த்தபோது மாணவி உயிரிழந்த நிலையில் காணப்பட்டார். தக்கலை போலீசார் மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து, வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.















