Home கன்னியாகுமரி செய்திகள் குமரியில் – மார்பிங் புகைப்படம் அனுப்பி மிரட்டல்: சைபர் கிரைம் மீது இளம் பெண் குற்றச்சாட்டு

குமரியில் – மார்பிங் புகைப்படம் அனுப்பி மிரட்டல்: சைபர் கிரைம் மீது இளம் பெண் குற்றச்சாட்டு

0

கன்னியாகுமரி: குளச்சல் பகுதியைச் சேர்ந்த இளம் பெண்ணின் புகைப்படத்தை தவறாக சித்தரித்து, வாட்ஸ்அப் மூலம் அனுப்பி மிரட்டியதாக கல்லூரி மாணவர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. புகாரின் அடிப்படையில் விசாரணை நடைபெற்றும், சம்பந்தப்பட்ட நபர் மீது இதுவரை வழக்குப்பதிவு செய்து கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை என இளம் பெண் தரப்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

குளச்சல் பகுதியைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் நாகர்கோவிலில் உள்ள கன்னியாகுமரி மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளார். அதில், கடந்த 19.07.2026 அன்று மாலை தனது செல்போன் எண்ணுக்கு வெளிநாட்டு எண்ணிலிருந்து வாட்ஸ்அப் மூலம் குறுஞ்செய்தி வந்ததாக தெரிவித்துள்ளார்.

அதற்கு பதிலளித்தபோது, தனது புகைப்படத்தையும் தனது நண்பரின் புகைப்படத்தையும் இணைத்து தவறாக சித்தரிக்கப்பட்ட புகைப்படங்களை சம்பந்தப்பட்ட நபர் அனுப்பியதாகவும், தன்னிடம் மேலும் பல புகைப்படங்கள் இருப்பதாக கூறி மிரட்டியதாகவும் புகாரில் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து மிரட்டல் விடுக்கப்படுவதாக கூறும் நிலையில், சம்பந்தப்பட்ட நபர் மீது உடனடியாக சட்ட நடவடிக்கை எடுத்து, தங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என இளம் பெண் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version