Home கன்னியாகுமரி செய்திகள் கருங்கல் அருகே கோர விபத்து – மாணவியைத் தொடர்ந்து வாலிபரும் பலி

கருங்கல் அருகே கோர விபத்து – மாணவியைத் தொடர்ந்து வாலிபரும் பலி

0
நந்தனா மற்றும் ஜெஸின் உயிரிழப்பு குறித்து அவதூறு பரப்ப வேண்டாம் என நந்தனாவின் தாயார் விடுத்த உருக்கமான வேண்டுகோள்
“அவனும் என் மகன்தான்” – ஜெஸின் குறித்து அவதூறு பதிவிட வேண்டாம் என நந்தனாவின் தாயார் உருக்கமான வேண்டுகோள்.

கன்னியாகுமரி மாவட்டம், கருங்கல் அருகே உள்ள மத்திகோடு பகுதியில் இன்று காலை நிகழ்ந்த இருசக்கர வாகன விபத்தில், பூதப்பாண்டியைச் சேர்ந்த பள்ளி மாணவி நந்தனா உயிரிழந்தார்.

இந்த விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

பரதநாட்டிய நிகழ்ச்சிகளில் பங்கேற்று தனது கலைத்திறமையால் தனித்துவம் பெற்று விளங்கிய மாணவி நந்தனாவின் திடீர் மறைவு, அவரது குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஜெஸினைத் தவறாக விமர்சிக்க வேண்டாம் – நந்தனாவின் தாயார் உருக்கமான வேண்டுகோள்!

இதுகுறித்து நந்தனாவின் தாயார் விடுத்துள்ள வேண்டுகோளில் கூறியிருப்பதாவது:

“ஜெஸின் தனது தங்கையான (பெரியம்மாவின் மகளான) நந்தனாவை வேண்டுமென்றே பைக்கில் அழைத்துச் செல்லவில்லை. நந்தனாதான் தனது அண்ணனுடன் வருவதாகத் தாயாரிடம் அடம்பிடித்து பைக்கில் ஏறியுள்ளார்.

இளைய சித்தியின் வீட்டு கிரகப்பிரவேசம் முடிந்து, அங்கேயே இரவு தங்கியிருந்தோம். அதிகாலை 6 மணியளவில் அனைவரும் அருகில் உள்ள பாட்டி வீட்டிற்குச் செல்லப் புறப்பட்டனர். உறவினர்கள் அனைவரும் சென்றதால் ஜெஸினும் அவர்களுடன் சென்றுள்ளார்.

அதிகாலை நேரத்தில் நிலவிய பனிமூட்டம் காரணமாகவே இந்த விபத்து நேர்ந்திருக்கலாம். தற்போது ஜெஸினும் உயிருடன் இல்லை.

எனவே, ஜெஸினைப் பற்றி யாரும் ஆபாசமான வார்த்தைகளால் தவறாகப் பதிவிட வேண்டாம். அவரது நிலைமையையும் புரிந்துகொண்டு, சமூக வலைதளங்களில் அவதூறான கருத்துகளைப் பதிவிடுவதைத் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன்” என நந்தனாவின் தாயார் உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version