Home கன்னியாகுமரி செய்திகள் கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி அருகே பாட்டியை கொடூரமாக கொன்ற பேரன் கைது

கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி அருகே பாட்டியை கொடூரமாக கொன்ற பேரன் கைது

0
பூதப்பாண்டி அருகே சொத்தை எழுதித் தர மறுத்ததால் பாட்டியை கொன்ற பேரன் கைது – கன்னியாகுமரி மாவட்டம்
Writing பூதப்பாண்டி அருகே சொத்தை எழுதித் தர மறுத்ததால் 78 வயது பாட்டியை கொடூரமாக தாக்கி கொன்ற பேரனை போலீசார் கைது செய்தனர்.

பூதப்பாண்டி அருகே சொத்தை எழுதித் தர மறுத்ததால் பாட்டியை கொடூரமாக கொன்ற பேரனை போலீசார் கைது செய்தனர்.

பூதப்பாண்டி அருகே உள்ள நன்றி குழிகோவில் தெரு பகுதியை சேர்ந்தவர் சாமுவேல். இவருடைய மனைவி இன்பமுத்து (வயது 78). இவர்களுடைய மகள் மல்லிகாவுக்கு 2 மகன்கள் உள்ளனர். இதில் மூத்த மகன் சதீஷ்குமார் (29) டிரைவராக இருந்து வருகிறார். திருமணமாகாத இவர் தன்னுடைய பாட்டி வீட்டுக்கு அடிக்கடி செல்வது வழக்கம். அப்போது அரை சென்ட் நிலத்தில் கட்டப்பட்டுள்ள பழைய வீட்டை தனது பெயருக்கு எழுதித் தரும்படி பாட்டி இன்பமுத்துவிடம் கேட்டுள்ளார். அதற்கு அவர் மறுப்பு தெரிவித்ததாக தெரிகிறது. இது சதீஷ்குமாருக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இதனால் பாட்டியின் மீது அவர் தீராத கோபத்தில் இருந்தார்.

பாட்டி மீது கொடூர தாக்குதல்

இந்தநிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு இரவு பாட்டியின் வீட்டுக்கு சதீஷ்குமார் சென்றுள்ளார். அங்கு இன்பமுத்து நிம்மதியாக தூங்கிக் கொண்டிருந்தார். இதனை பார்த்த சதீஷ்குமார், ஆவேசத்தின் உச்சிக்கே சென்றார். தன்னை புலம்ப வைத்த நீ உயிரோடு இருக்கக்கூடாது என கூறியபடி திடீரென பாட்டியை சரமாரியாக தாக்க தொடங்கினார். இதனை சற்றும் எதிர்பார்க்காத அவர் அலறினார். எனினும் ஆத்திரம் தீராத சதீஷ்குமார், அவரின் உடலை தூக்கிக் கொண்டு சிமெண்டு தரையில் ஓங்கி வீசியுள்ளார். பிறகு அவர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். இந்த கொடூர தாக்குதலில் படுகாயமடைந்த பாட்டி துடிதுடித்த நிலையில் உயிருக்காக போராடினார்.

சாவு இதற்கிடையே சத்தம் கேட்டு ஓடி வந்த உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று காலையில் இன்பமுத்து பரிதாபமாக இறந்தார். மேலும் இதுகுறித்து இன்பமுத்துவின் மற்றொரு மகன் சுந்தரராஜு அளித்த புகாரின் பேரில் பூதப்பாண்டி போலீசார் வழக்குப்பதிந்து தப்பி ஓடிய சதீஷ்குமாரை மடக்கி பிடித்து கைது செய்தனர். சொத்தை எழுதித் தராததால் பாட்டியை கொடூரமாக பேரன் கொன்ற சம்பவம் குமரியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version