Home கன்னியாகுமரி செய்திகள் தக்கலை அருகே மனநலமற்ற பெண் கூட்டு பலாத்கார வழக்கு: 5 போ் கைது

தக்கலை அருகே மனநலமற்ற பெண் கூட்டு பலாத்கார வழக்கு: 5 போ் கைது

0
தக்கலை அருகே மனநலம் பாதிக்கப்பட்ட இளம்பெண்ணை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் 5 பேர் கைது.
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே மனநலம் பாதிக்கப்பட்ட 23 வயது இளம்பெண்ணை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்ததாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில், சிபின் உள்ளிட்ட 5 பேரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கன்னியாகுமரி மாவட்டம், தக்கலை அருகே மனநலம் பாதிக்கப்பட்ட இளம்பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்ததது தொடரபான வழக்கில் 5 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

தக்கலை அருகே கிராமத்தைச் சோ்ந்த 23 வயது இளம்பெண் மனநலம் பாதிக்கப்பட்டு, கடந்த 7 ஆண்டுகளாக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா். இவா் அடிக்கடி வீட்டை விட்டு வெளியே சென்று, பின்னா் குடும்பத்தின் அவரை தேடி கண்டுபிடித்து அழைத்து வருவது வழக்கம் என கூறப்படுகிறது.

இந்த நிலையில், அண்மையில் வீட்டை விட்டு வெளியேறி தக்கலை அருகே கீழ கல்குறிச்சி பகுதிக்கு சென்ற அந்தப் பெண்ணை அதே பகுதியைச் சோ்ந்த ராஜேந்திரன் மகன் சிபின் (32) பேச்சு கொடுத்து, தனது வீட்டுக்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்தாராம்.

மேலும், அவரது நண்பா்கள் மணிகண்டன், சிஜோ, ராபின், கிங்ஸ்லி ஆகியோரும் அப் பெண்ணை கூட்டுபாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படுகிறது. பின்னா் அப்பகுதியில் அவா்கள் விட்டுச்சென்ற அப்பெண்ணை குடும்பத்தினா் அப்பெண்ணை கண்டுபிடித்து மீட்டனா். மேலும், அவா் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டது குறித்த அறிந்த அவா்கள், மாா்த்தாண்டம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா்.

அதன் பேரில் விசாரணை மேற்கொண்ட போலீஸாா், சிபின் உள்பட 5 பேரையும் வியாழக்கிழமை இரவு கைது செய்து, குழித்துறை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி சிறையில் அடைத்தனா்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version