தேங்காபட்டணம்: பெண்ணை தாக்கியவர் மீது வழக்கு

0
380

தேங்காபட்டணம் பகுதி முள்ளுர்துறையை சேர்ந்தவர் ஜாண்பிரிட்டோ மனைவி ஜோஜி (23). அதே பகுதியை சேர்ந்தவர் ஜோசப் கென்னடி (45). ஜோசப் கென்னடி மனைவி குப்பைகளை ஜோஜியின் வீட்டு முன்பு கொட்டியுள்ளார். இதை தட்டிக் கேட்டதால் முன்விரோதம் இருந்து வந்தது. நேற்று ஜோசப் கென்னடி, ஜோஜியின் வீட்டில் அத்துமீறி சென்று அவரை கெட்ட வார்த்தைகள் பேசி தாக்கியுள்ளார். இதில் கீழே விழுந்து, ஜோஜியின் காதில் கிடந்த கம்மல் மாயமாகியுள்ளது. காயமடைந்த ஜோஜி குழித்துறை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். புகாரின் பேரில் புதுக்கடை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here