ஆந்திராவில் காங்கிரஸுக்கு ஒரு கவுன்சிலர்கூட இல்லை

0
14

ஆந்திராவில் காங்​கிரஸுக்கு ஒரு கவுன்​சிலர்​கூட இல்லாத நிலை உரு​வாகி உள்​ளது.

ஒரு கால கட்​டத்​தில் காங்கிரஸ் கட்​சி​யின் கோட்​டை​யாக ஆந்​திரா விளங்​கியது. கடந்த 1982-ல் என்​.டி.​ராமா ராவ், ‘தெலுங்கு தேசம்’ தொடங்கி ஆட்​சி​யைப் பிடித்தார். இதன் பிறகு ஒருங்​கிணைந்த ஆந்​தி​ரா​வில் தெலுங்கு தேச​மும், காங்​கிரஸும் மாறி, மாறி ஆட்சி அமைத்து வந்​தன.

இந்த சூழலில் ஆந்​தி​ரா​வில் இருந்து தெலங்​கானா மாநிலத்தை உரு​வாக்​கக் கோரி தொடர் போராட்​டங்​கள் நடை​பெற்​றன. கடந்த 2014-ம் ஆண்டு ஜூன் 2-ம் தேதி நாட்​டின் 29-வது மாநில​மாக தெலங்​கானா உதய​மானது. ஆந்​தி​ரா, தெலங்​கா​னா​வுக்கு 10 ஆண்​டு​கள் ஹைத​ரா​பாத் பொது தலைநகர​மாக இருக்​கும். அதன் பிறகு ஹைத​ரா​பாத் தெலங்​கா​னா​வின் நிரந்தர தலைநகர​மாக மாறும் என்று அறிவிக்​கப்​பட்​டது.

அப்​போதைய காங்​கிரஸ் அரசின் செய​லால் ஆந்​தி​ரா​வுக்கு தலைநகரம் இல்​லாத சூழல் எழுந்​தது. இதன் எதிர்​விளை​வாக ஆந்தி​ரா​வில் காங்​கிரஸ் முழு​மை​யாக காணா​மல் போய்​விட்​டது. கடந்த 2024-ம் ஆண்​டில் நடந்த சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் தெலுங்கு தேசம் வெற்றி பெற்று சந்​திர​பாபு நாயுடு முதல்​வ​ராகப் பதவி வகிக்​கிறார்.

தற்​போது ஜெகன்​மோகன் ரெட்​டி​யின் தங்கை ஒய்​.எஸ். சர்​மிளா காங்​கிரஸ் கட்​சி​யின் மாநில தலை​வ​ராகப் பதவி வகித்து வருகிறார். அவர் தலை​மையி​லான காங்​கிரஸ் ஆந்​தி​ரா​வில் அண்மை​யில் நடை​பெற்ற உள்​ளாட்​சித் தேர்​தலில் போட்டியிட்டது.

இதில் காங்​கிரஸ் சார்​பில் ஒரு​வர்​கூட வெற்றி பெறவில்​லை. காங்​கிரஸுக்கு ஆந்​தி​ரா​வில் நாடாளு​மன்ற உறுப்பினரோ, சட்​டப்​பேரவை உறுப்​பினரோ இல்​லை. தற்​போது உள்​ளாட்​சித் தேர்​தலிலும் ஒரு கவுன்​சிலர்​கூட இல்​லாத நிலை உருவாகியுள்ளது சமூக வலை​தளங்​களில்​ வி​வாத​மாக ​மாறியிருக்கிறது.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here