மகாராஷ்டிராவில் விவசாயிகள் போராட்டம் – மாநில அரசின் அவசரச் சட்டத்துக்கு எதிர்ப்பு

0
29

கோகுல் பால் பண்ணை என்று அழைக்கப்படும் கோலாப்பூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள், மாநில அரசின் அவசரச் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பேரணியாகச் சென்றனர். அவர்களில் பலர் தங்கள் கால்நடைகளையும் உடன் அழைத்துச் சென்றனர்.

ஆண்டுக்கு ரூ.500 கோடிக்கும் அதிக விற்றுமுதல் கொண்ட கூட்டுறவு நிறுவனமான கோகுல் பால் பண்ணையின் நிர்வாக வாரியம் 25 உறுப்பினர்களைக் கொண்டது. கோகுல் நிர்வாக வாரியத்துக்கு கடந்த அக்டோபர் 19-ம் தேதி நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் மேலவை உறுப்பினரான சதேஜ் பாட்டீல் தலைமையிலான ராஜரிஷி ஷஹு ஷேட்காரி சம்விச்சாரி அகாடி 13 இடங்களைக் கைப்பற்றியது.

கோகுல் நிறுவனத்தைக் கைப்பற்றும் நோக்கில் பாஜக தலைமையிலான கூட்டணி தீவிர பிரச்சாரம் செய்தும் 12 இடங்களில் மட்டுமே அது வெற்றி பெற்றது.

தேர்தல் முடிவை அடுத்து, மாநில அரசு ஒரு அவசரச் சட்டத்தைப் பிறப்பித்தது. இதன்மூலம், கோகுல் பால் பண்ணை நிர்வாக வாரியத்தில் அரசு சார்பில் ஐந்து உறுப்பினர்களை நியமிக்க மகாராஷ்டிர அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இந்த ஐந்து உறுப்பினர்களில் நான்கு பேருக்கு நிர்வாக வாரியத்தில் வாக்களிக்கும் உரிமை வழங்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, பாஜக தலைமையிலான கூட்டணியின் பலம் 12-ல் இருந்து 16 ஆக அதிகரித்துள்ளது.

மாநில அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து ராஜரிஷி ஷஹு ஷேட்காரி சம்விச்சாரி அகாடி சார்பில் கோலாப்பூரில் இன்று மாபெரும் பேரணி நடத்தப்பட்டது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான விவசாயிகள் இதில் கலந்து கொண்டனர். பலர், தங்கள் கால்நடைகளையும் அழைத்து வந்திருந்தனர்.

மகாராஷ்டிர அரசின் இந்த நடவடிக்கைக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி கடந்த வாரம் எதிர்ப்பு தெரிவித்திருந்தார். அவர் வெளியிட்டிருந்த எக்ஸ் பதிவில், ‘கோகுலில் பால் உற்பத்தியாளர்கள் பாஜகவை தோற்டித்தனர். ஆனால், தேர்தலுக்குப் பிறகு பாஜக விதிகளை மாற்றி, 4 இயக்குநர்களைத் திணித்து பெரும்பான்மையை திருடியுள்ளது. இது பால் உற்பத்தியாளர்களின் வாக்குகளைத் திருடுவது, மக்கள் தீர்ப்பில் கலப்படும் செய்வது போன்றது.

அதிகாரத்தைக் கைப்பற்ற பாஜக எல்லா இடங்களிலும் எந்த எல்லைக்கும் செல்லும் அளவுக்கு அது விரக்தியடைந்துள்ளது. பால் உற்பத்தயாளர்களின் வாக்குகளைத் திருடுபவர்களே, நினைவில் கொள்ளுங்கள் விவசாயிகள் இதை மறக்க மாட்டார்கள்’ என குறிப்பிட்டிருந்தார்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here