சென்னையில் வக்கீலாக பணிபுரியும் கோழிப்போர் பகுதியை சேர்ந்த நெல்சன் (24) என்பவரை, சமூக வலைத்தள பதிவுகள் தொடர்பாக நாம் தமிழர் கட்சியை சேர்ந்த ராஜா பேரோன் உள்ளிட்ட 4 பேர் நேற்று அவரது வீட்டிற்கு வந்து தகராறு செய்து தாக்கியுள்ளனர். சத்தம் கேட்டு மக்கள் திரண்டதும் கும்பல் தப்ப முயன்றது. தக்கலை போலீசார் வழக்குப்பதிவு செய்து, பாடி பில்டரான ராஜா பேரோனை கைது செய்தனர். வழக்கறிஞர் நெல்சன் வீட்டிற்கு தாரகை கத்பர்ட் எம்எல்ஏ வந்து ஆறுதல் கூறினார்.















