மார்ச் 21 வரை வெப்பநிலை அதிகரிக்காது: வானிலை ஆய்வு மையம் தகவல்

0
378

தமிழகத்தில் வரும் 21-ம் தேதி வரை வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பு இல்லை என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழக பகுதிகளின்மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று முதல் 23-ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 21-ம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை வழக்கத்தை ஒட்டியே இருக்கும். அதிகரிக்க வாய்ப்பு இல்லை

நேற்று காலை 8.30 மணி வரையிலான 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் பந்தலூரில் 5 செ.மீ., திருச்சி மாவட்டம் தென்பரநாடு, நீலகிரி மாவட்டம் விண்ட்வொர்த் எஸ்டேட், விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் 2 செ.மீ., சிவகங்கை மாவட்டம் திருப்புவனம், தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி, சாத்தான்குளத்தில் 1 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

சமவெளி பகுதிகளில் அதிகபட்சமாக வேலூரில் 99 டிகிரி, குறைந்தபட்சமாக கரூர் பரமத்தியில் 71 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் இன்று ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மழைக்கு வாய்ப்பு இல்லை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here