தமிழக சட்டம் – ஒழுங்கு டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர் சிறைத் துறைக்கு மாற்றம்

0
26

தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர் சிறைத்துறைக்கு மாற்றம் செய்யப்பட்டார். புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் பொறுப்பேற்க உள்ள நிலையில் தேர்தல் ஆணையத்தால் டிஜிபியாக நியமிக்கப்பட்ட சந்தீப் ராய் ரத்தோர் மாற்றப்பட்டார்.

அதேபோல் சிறைத்துறை கூடுதல் டிஜிபியாக இருந்த கே.சங்கர் குற்றப்புலனாய்வுத்துறை ஏடிஜிபியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக தனிப் பெருங்கட்சியாக உருவெடுத்து பின்னர் காங்கிரஸ், இடதுசாரிகள், விசிக, ஐயூஎம்எல் கட்சிகளின் ஆதரவோடு ஆட்சி நடத்தி வருகிறது.

புதிய ஆட்சி அமையும் முன்னர் தேர்தலை ஒட்டி தேர்தல் ஆணையம் தமிழக டிஜிபி, தலைமைச் செயலர் உள்ளிட்ட பல்வேறு முக்கியப் பொறுப்புகளில் இருந்த அதிகாரிகளை மாற்றம் செய்தது.

புதிய ஆட்சி அமைந்த பின்னரும் அதிகாரிகள் மாற்றம் பெரிய அளவில் நடந்து வருகிறது.

அந்த வகையில், தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர் சிறைத்துறை டிஜிபியாக மாற்றம் செய்யப்பட்டார். புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் பொறுப்பேற்க உள்ள நிலையில் தேர்தல் ஆணையத்தால் டிஜிபியாக நியமிக்கப்பட்ட சந்தீப் ராய் ரத்தோர் மாற்றப்பட்டு இருக்கிறார்.

அதேபோல், சிறைத்துறை கூடுதல் டிஜிபியாக இருந்த கே.சங்கர் குற்றப்புலனாய்வுத்துறை ஏடிஜிபியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here