குமரி மாவட்டம் வழியாக போலி பாஸ் மூலம் கேரளாவுக்கு கனிம வளங்கள் கடத்தப்படுகின்றன. இந்த நிலையில் மாவட்ட எஸ்பி உத்தரவின் பேரில் தக்கலை சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஜோலார் மற்றும் போலீசார் தக்கலை அடுத்த பள்ளியாடி பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக கனிமங்கள் ஏற்றி வந்த டாரஸ் லாரிகளை நிறுத்தி சோதனை செய்தனர். இதில் ஒரு டாரஸ் லாரியில் போலி பாஸ் மூலம் ஜல்லி கடத்தி வந்தது தெரிய வந்தது. இதையடுத்து அந்த லாரியை பறிமுதல் செய்து, டாரஸ் லாரி டிரைவர் காங்கரை என்ற பகுதியை சேர்ந்த தேவ சுஜன் (34) என்பவரை போலீசார் கைது செய்து லாரியை பறிமுதல் செய்தனர்.