மார்த்தாண்டம் அருகே மருதங்கோடு பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ். ஆட்டோ டிரைவர். இவரது மனைவியின் தங்கை ஒருவரின் வழக்குத் தொடர்பாக சுரேஷ் சாட்சியளித்துள்ளார். இதனால் அப்பகுதியைச் சேர்ந்த முரளிதரன் என்பவருக்கு சுரேஷ் மீது முன்விரோதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று மாலை சுரேஷ் ஆட்டோவை நிறுத்திவிட்டுச் செல்லும்போது, முரளிதரன் சுரேஷைத் தடுத்துநிறுத்தி தகராறு செய்து கல் வீசித் தாக்கியுள்ளார். இதில் ஆட்டோவின் இன்டிகேட்டர் உடைந்துள்ளது. இதுசம்பந்தமாக சுரேஷ் மார்த்தாண்டம் போலீசில் புகார் செய்தார். போலீசார் இன்று 14-ம் தேதி காலை முரளிதரன் மீது வழக்குப் பதிவு செய்தனர்.