பட்டாசு ஆலைகளில் குழந்தைகளை வேலைக்கு அமர்த்தினால் கடும் நடவடிக்கை

0
67

மதுரை மண்டல தொழிற்சாலை பாதுகாப்பு – சுகாதாரத்துறை கூடுதல் இயக்குனர் சித்தார்த்தன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கோடை விடுமுறையில் பள்ளி குழந்தைகளை தொழிற்சாலைகளில் வேலைக்கு அமர்த்தக்கூடாது என எச்சரித்துள்ளார். 18 வயதுக்குட்பட்ட வளரிளம் பருவத்தினரை  பட்டாசு, தீப்பெட்டி போன்ற அபாயகரமான தொழிற்சாலைகளில் பணியில் ஈடுபடுத்தக் கூடாது. மீறினால் தொழிற்சாலை உரிமையாளர், மேலாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, 2 வருட சிறை தண்டனை, ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here