தமிழகத்தில் சூரியசக்தி மின்னுற்பத்தி 10 ஆயிரம் மெகாவாட்டாக அதிகரிப்பு

0
366

தமிழகத்தில் சூரியசக்தி மின்னுற்பத்தி 10 ஆயிரம் மெகாவாட்டை தாண்டியுள்ளது.

சூரியசக்தி மின்னுற்பத்திக்கு சூரியனின் வெப்பத்தை விட ஒளியே முக்கியம். அந்த வகையில், தமிழகத்தில் ஆண்டுக்கு 300 நாட்களுக்கு மேல் சூரியசக்தி மின்சாரம் கிடைக்கும் சூழல் உள்ளது. ஆண்டுதோறும் பிப்ரவரி, மார்ச் மாதங்களில் விருதுநகர், சிவகங்கை உள்ளிட்ட தென்மாவட்டங்களில் அதிகாலை 5.30 மணி முதல் இரவு 7 மணி வரையும், மற்ற மாதங்களில் மழை பெய்யும் நாட்களைத் தவிர்த்து காலை 6.30 மணி முதல் மாலை 6 மணி வரையும் சூரிய ஒளி கிடைக்கிறது.

இதனால், பலரும் வீடுகளில் குறைந்த திறனில் மேற்கூரை மின்நிலையங்களை அமைத்து வருகின்றனர். கடந்த மாத நிலவரப்படி, தமிழகத்தில் ஒட்டுமொத்த சூரியசக்தி மின்னுற்பத்தி 10,153 மெகாவாட்டாக அதிகரித்துள்ளது. இதில், வீடுகளில் 932 மெகாவாட் திறனில் மேற்கூரை சூரியசக்தி மின்நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், விவசாயத் திட்டங்களின் கீழ், 700 மெகாவாட் திறனில் மேற்கூரை சூரியசக்தி மின்நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

சூரியசக்தி மின்நிலையங்கள் மூலம் மழைக் காலங்களைத் தவிர்த்து மற்ற நாட்களில் சராசரியாக 5 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here