எழும்பூர் அரசு செயற்கை கருத்தரிப்பு மையத்துக்கு மருத்துவர் பணியிடங்களை உருவாக்க கோரிக்கை

0
19

 எழும்​பூர் அரசு செயற்கை கருத்​தரிப்பு மையத்துக்கு மருத்​து​வர் பணி​யிடங்​களை உரு​வாக்க வேண்​டும் என, அரசு மருத்​து​வர்​களுக்​கான சட்​டப்​போ​ராட்​டக் குழு தலை​வர் மருத்​து​வர் பெரு​மாள் பிள்ளை தெரி​வித்​துள்​ளார்.

இதுதொடர்​பாக, அவர் நேற்று வெளி​யிட்ட செய்​திக் குறிப்​பு: தமிழக முதல்​வர் விஜய் கடந்த 8-ம் தேதி சென்னை எழும்பூர் அரசு மகப்​பேறு மருத்​து​வ​மனையை ஆய்வு மேற்​கொண்​டார்.

அப்​போது, முதல்​வர் என்ற அதி​கார தோரணை எது​வும் இல்​லாமல், தாய்​மார்​களு​டன் சாதா​ரண​மாக பேசி​யதை​யும், குழந்​தைகளை தன் கைகளில் ஏந்தி கொஞ்​சி​யதை​யும் மறக்க முடி​யாது.

தமிழகத்​தில் முதல்​முறை​யாக சென்னை எழும்​பூர் அரசு மகப்​பேறு மருத்​து​வ​மனை​யில் இலவச கருத்​தரிப்பு மையத்​தில் பெண்​ணுக்கு இரட்டை குழந்​தைகள் பிறந்​துள்​ளன. பல்​வேறு சவால்​களை எதிர்​கொண்டு மருத்​து​வர்​கள் இந்த சாதனையை படைத்​துள்​ளனர்.

ஆனால், இந்த மையத்​துக்​கென்று மருத்​து​வர் பணி​யிடங்​கள் இது​வரை உரு​வாக்​காதது வருத்​தமளிக்​கிறது. அரசு உடனடி​யாக இந்த கருத்​தரிப்பு மையத்​துக்கு ஒரு பேராசிரியர், ஒரு இணைப் பேராசிரியர் மற்​றும் இரண்டு உதவிப் பேராசிரியர் பணி​யிடங்​களை உரு​வாக்க வேண்​டும்.

கரூரில் உயி​ரிழந்​தவர்​களின் வாரிசுகளுக்கு முதல்​வர் அரசு பணி வழங்​கியதை வரவேற்​கிறோம். கரோனா பேரிடரில் பணி​யாற்றி உயி​ரிழந்த அரசு மருத்​து​வர் விவே​கானந்​தன் மனைவி அரசு வேலை வேண்டி 5 ஆண்​டு​களுக்​கும் மேலாக கண்​ணீருடன் முதல்​வருக்கு வேண்​டு​கோள் விடுத்த பிறகும், முந்​தைய திமுக அரசு கருணை காட்​ட​வில்​லை.

கரோனா காலத்​தில் மக்​களை காப்​பாற்ற போராடி உயி​ரிழந்த மருத்​து​வர் விவே​கானந்​தன் மனை​விக்கு நிவாரணம் மற்​றும் அரசு வேலைக்​கான ஆணையை முதல்​வர் வழங்க வேண்​டும்.

அரசு மருத்​து​வர்​களுக்கு அரசாணை 354-ஐ அமல்​ படுத்​தி, அதன்​படி ஊதி​யம் வழங்க வேண்​டும். தமிழகத்​தில் மிகப்​பெரிய மாற்​றத்தை ஏற்​படுத்​திட முனைப்பு காட்​டும் நம் முதல்​வர், நிச்​ச​யம் அரசு மருத்​து​வர்​களின் வேதனை​களுக்கு முற்​றுப்​புள்ளி வைப்​பார் என எதிர்​பார்க்​கிறோம்​. இவ்​வாறு அவர்​ தெரி​வித்​துள்​ளார்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here