‘துரோகியே’ என்று அழைத்த ராகுல் காந்தி… ‘நாட்டின் எதிரி’ என பதிலடி கொடுத்த அமைச்சர்!

0
183

 நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. நேற்று நாடாளுமன்ற வளாகத்தின் `மகர துவார்’ பகுதியில் ராகுல் காந்தி, பஞ்சாபைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.பி.க்களுடன் நின்று பேசிக் கொண்டிருந்தார்.

அப்போது மத்திய ரயில்வே இணை அமைச்சர் ரவ்னீத் சிங் பிட்டு அந்த வழியாக வந்தார். அப்போது காங்கிரஸ் எம்.பி.க்களைப் பார்த்த ரவ்னீத்சிங் பிட்டு, ஏதோ போரில் வெற்றி பெற்றவர்கள் போல இங்கு வந்து அமர்ந்திருக்கிறார்கள் என்று கருத்து தெரிவித்தார்.

இதற்கு ராகுல் கூறும்போது, “ஒரு துரோகி இந்த வழியாகச் செல்கிறார். எனது துரோகி நண்பா” என்று அழைத்தார். அப்போது ரவ்னீத் சிங், “நாட்டின் எதிரியே” என்று ராகுலை நோக்கி பதிலடி கொடுத்தார். இரு தலைவர்களின் இந்த வார்த்தை மோதலால் அங்கு சில நிமிடங்கள் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் பின்னர் இருவரும் சிரித்தவாறே அங்கிருந்து சென்றனர்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here