மோடியின் ‘மேக் இன் இந்தியா’வுக்குப் புதின் புகழாரம்: 16 வயது இந்திய ஏஐ தொழில்முனைவோருக்கும் பாராட்டு

0
37

கேரளாவைச் சேர்ந்த 16 வயது சிறுவன் ராவுல் ஜான் அஜுவின் ஏஐ சாதனைகளைப் பாராட்​டிய ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், இவரது பணி பிரதமர் மோடி​யின் ‘மேக் இன் இந்தியா’ திட்​டத்​துக்கு வலுசேர்ப்​ப​தாகப் புகழாரம் சூட்​டியுள்​ளார்.

ரஷ்யாவில் வியாழக்​கிழமை நடை​பெற்ற ‘ஏஐ ஜர்னி 2026’ மாநாட்டில், கஜகஸ்​தான் அதிபர் காசிம்-ஜோமார்ட் டோகாயேவுடன் இணைந்து இளம் கண்​டு​பி​டிப்​பாளர்​களிடம் உரையாடிய புதின், ‘ஏஐ ரீம் டெக்​னாலஜிஸ்’ நிறு​வனத்​தின் நிறு​வனரும் தலை​மைத் தொழில்​நுட்ப அதி​காரியுமான (சிடிஓ) அஜுவைச் சந்​தித்​தார். அப்​போது அவர், “இறுதி​யில் உங்​கள் பணி, பிரதமர் மோடி​யின் ‘மேக் இன் இந்​தியா’ அழைப்பை நனவாக்க உதவு​கிறது. ஏனெனில், இளைஞர்​கள் தங்​களுக்​கான தீர்​வு​களைக் கண்​டறிந்து செயல்​படுத்த அது உதவு​கிறது” என்று அஜுவிடம் கூறினார்.

அமெரிக்க வர்த்​தகப் பிரதி​நிதி அலு​வல​கம் வெளி​யிட்ட ‘பிரிவு 301’ அறிக்​கை​யில், உற்​பத்​தித் துறை​யில் அளவுக்கு அதி​க​மான உற்பத்​திக்கு வழிவகுக்​கும் கொள்​கைகளை இந்​தியா பின்பற்றுவதாகவும், அத​னால் ஏற்​படும் உல​களாவிய சிக்கல்களைச் சரிசெய்​யத் தவறி​விட்​ட​தாகவும் குற்றம்சாட்டியுள்ளது.

‘மேக் இன் இந்​தியா’, உற்​பத்​தி​யுடன் இணைந்த ஊக்​கத்​தொகைத் திட்​டம் (பிஎல்ஐ), ஆத்​மநிர்​பர் பாரத், இந்​திய பிராண்ட் ஈக்​விட்டி அறக்​கட்​டளை (ஐபிஇஎஃப்) ஆகியவை இதற்​குக் காரண​மான முக்கிய முயற்​சிகள் என்​றும், குறிப்​பாக எஃகு, சூரிய ஆற்​றல், சுகாதா​ரம், தகவல் தொடர்​புத் தொழில்​நுட்​பத் துறைகளில் இவை உள்​ள​தாகவும் அந்த அறிக்கை குறிப்​பிட்​டிருந்​தது.

இந்த விமர்​சனம் வெளியான சில நாட்​களில் புதின் மேக் இன் இந்தியா’வுக்கு ஆதர​வாகப் பேசி​யுள்​ளது குறிப்​பிடத்​தக்​கது. இணை​யத்​தில் ‘இந்​தி​யாவின் ஏஐ சிறு​வன்’ என்​றும் ‘ராவுல் தி ராக்ஸ்​டார்’ என்​றும் அழைக்​கப்​படும் அஜு, கேரளாவைச் சேர்ந்தவர். வழக்​க​மான பொறி​யியல், கணினி அறி​வியல் பின்னணி இல்​லாமல், வடக்கு எடப்​பள்ளி அரசு மேல்​நிலைப் பள்ளி​யில் பிளஸ் டூ வணிக​வியல் படித்​துக்​கொண்டே ஏஐ துறையில் தடம் பதித்​துள்​ளார்.

ஒன்​பது வயதில் சுய​விருப்​பத்​துடன் தொழில்​நுட்​பத்​தைக் கற்​கத் தொடங்​கிய அஜு, தற்​போது ‘ஏஐ ரீம் டெக்​னாலஜிஸ்’ மூலம் திங்க்​கிராஃப்ட், ரெஸ்க்யூ ஏஐ, மீபாட் போன்ற ஏஐ கரு​வி​களை உரு​வாக்கி​யுள்​ளார். மேலும், ‘திங்க்​கிராஃப்ட் அகாடமி’ மூலம் தொழில்நுட்​பப் பின்​னணி இல்​லாதவர்​களுக்​கும் ஏஐயை எளிமையாகக் கற்​றுக்​கொடுத்து வரு​கிறார். எட்டு டெட்​எக்ஸ் உரைகளை நிகழ்த்தி, ஐஐடிகள், பல்​கலைக்​கழகங்​கள், பள்ளிகளில் பயிலரங்​கு​களை நடத்​தி​யுள்ள இவரை, இணையத்தில் 5 லட்​சத்​துக்​கும் அதி​க​மானோர் பின்தொடர்கின்றனர்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here