புதுக்கடை: பார்த்தசாரதி கோயில் முன்பு ஆர்ப்பாட்டம்

0
41

புதுக்கடை அருகே பார்த்திவபுரம் பார்த்தசாரதி கோயில் உள்ளது. இந்து அறநிலையத்துறை மற்றும் தொல்லியல் ஆராய்ச்சி துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவிலில் பக்தர்களால் கொண்டு வரப்படும் நேர்ச்சை பொருட்கள், வழிபாடுகள் மற்றும் விஷேச நாட்களில் பக்தர்களால் ஏற்பாடு செய்யப்படும் பூஜை மற்றும் தோரணங்களுக்கு அனுமதி மறுக்கும் செயல் நடப்பதாக புகார் உள்ளது. மேலும் கடந்த நவம்பர் மாதம் 13ஆம் தேதி ஆலயத்தில் இரு துறைகளின் அஜாக்கிரதையால் பிரசித்தி பெற்ற ஐம்பொன் சிலை திருட்டு போனது. 

அந்த சிலைகளை மீண்டும் பின்பும் ஆலயத்துக்கு கொண்டு வராமல் காலம் கடத்துவதை நிறுத்தி, உடனடியாக சிலையை ஆலயத்தில் கொண்டு வந்து சிவேலி பூஜையை தொடர்ந்து நடத்திட கேட்டும், ஆலயத்தில் ஆம்பாடி கிருஷ்ணசுவாமியை பிரதிஷ்டை செய்து ஆலய பக்தர்களுக்கு வழிபட ஆலயத்தை திறந்து விட கேட்டும், ஆலயத்தில் கும்பாபிஷேகத்தை உடனடியாக நடத்த கேட்டும் முஞ்சிறை ஒன்றிய இந்து முன்னணி சார்பில் தலைவர் செல்வநாயகம் தலைமையில் பார்த்திவபுரம் பார்த்தசாரதி கோயில் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் இன்று மாலை நடந்தது. ஒன்றிய பொதுச் செயலாளர் குமாரதாஸ் வரவேற்றார். மாவட்ட துணைத் தலைவர் ஜெயராம், உட்பட பலர் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here