புதுக்கடை சந்திப்பில் கிறிஸ்தவ ஆலயத்திற்கும், பஸ் ஸ்டாண்டிற்கும் அருகாமையில் பொதுமக்களுக்கு இடையூறாக அமைந்துள்ள டாஸ்மாக் கடையை அப்புறப்படுத்தக் கோரி, தேமுதிக சார்பில் மாவட்டப் பொருளாளர் செல்லத்துரை தலைமையில் இன்று (27-ம் தேதி) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் ஐடன் சோனி உள்ளிட்டோர் பங்கேற்றனர். அதிகாரிகள் மற்றும் காவல்துறையினரின் பேச்சுவார்த்தைக்குப் பிறகு, உடனடியாக கடையை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்ற உறுதிமொழியைத் தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.















