களியங்காடு சிவன் கோவிலில் பிரதோஷ வழிபாடு

0
570

நாகர்கோவில் களியங்காடு சிவபுரம் சிவன் கோவிலில் பிரதோஷ வழிபாடு நேற்று நடைபெற்றது. இதையொட்டி மாலை 5.30 மணிக்கு சிவபெருமானுக்கும், நந்தி தேவருக்கும் மஞ்சள், அரிசி மாவு, பால், தயிர், பன்னீர், சந்தனம், இளநீர் உள்ளிட்ட 16 வகையான சிறப்பு அபிஷேகங்கள் நடந்தன.

மாலை 6.30 மணிக்கு அலங்காரம், பிரதோஷ சிறப்பு தீபாராதனை, 6.40 மணிக்கு எல்லா சாமிகளுக்கும் பதிவு தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை தலைவர் சின்னையன், செயலாளர் ராஜகோபால் ஆகியோர் செய்திருந்தனர்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here